புதிய பொருளாதார ஆலோசகராகும் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன்!

IIT-IIM முன்னாள் மாணவர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் புதிய பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்  அடுத்த 3 ஆண்டுகளுக்கு இப்பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது!

Last Updated : Dec 7, 2018, 05:42 PM IST
புதிய பொருளாதார ஆலோசகராகும் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன்! title=

IIT-IIM முன்னாள் மாணவர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் புதிய பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்  அடுத்த 3 ஆண்டுகளுக்கு இப்பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது!

சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் ஸ்கூலில் PhD பட்டம் பெற்ற கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தற்போது இந்திய வணிக பள்ளியில் பகுப்பாய்வு நிதியியல் மையத்திற்கான நிதியியல் மற்றும் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

"தலைமை பொருளாதார ஆலோசகர் பதவிக்கு Dr. கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் அவர்களை நியமிப்பதற்கு அமைச்சரவை நியமனம் குழு பரிந்துரைத்துள்ளது" என அரசு செய்திகுறிப்பு தெரிவிக்கின்றது.

இந்திய வங்கித் துறையின் செல்வாக்கு வாய்ந்த குரலாக திகழ்ந்தவர் கிருஷ்ணமூரத்தி. இந்திய ரிசர்வ் வங்கியின் வங்கிகளுக்கான ஆணையத்தின் நிபுணத்துவ குழுவில் இவரது சேவை பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாக அர்விந்த் சுப்பிரமணியன் அவர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறிய பின்னர், ஜூன் 30-ஆம் தேதி பொருளாதார ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்தது. 

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலனால் தலைமையிலான நிதி அமைச்சக தேடல் குழு, குறிப்பிட்ட பதவிக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலினை செய்தது. இந்த தேடல் குழுவில் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுபாஷ் சி. கர்க் மற்றும் செயலாளர் பி. பி. ஷர்மா, ஊழியர்கள் பயிற்சித் துறை தேர்வு குழு உறுப்பினர்கள் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2014-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்ட அர்விந்த் சுப்பிரமணியன் பதியேற்றார். அவரது பதிவிகாலம் வரும் மே, 2019 வரை ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தனது பதிவி காலம் முடியும் முன்னதாகவே அரவிந்த சுப்பிரமணியன் பதவியை துறந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News