இரவு நேரத்தில் பேருந்தில் பயணித்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல்துறையினர் மூன்று நபரை கைது செய்துள்ளனர்....
கொல்கத்தா: நேற்று முன்தினம் இரவு பிரகாத்தி மைதானத்தில் பெண் ஒருவர் பேருந்தில் சென்றுகொண்டிருக்கையில், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில் நடந்துள்ளது. பிரகாத்தி மைதானத்தில் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் EM பைபாஸ் வழியாக ஒரு தனியார் பஸ் கடத்தப்பட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, பேருந்துக்குள் ஒரு பெண்ணிடம் சிலர் சண்டை இடுவதை காவல்துறையினர் கண்டறிந்தனர், அந்த பெண் உதவிக்காகக் கூச்சலிட்டார் என காவல்துறையினர் தெரிவித்தனர். பேருந்தில் பயணிகள் குறைவாக இருந்த பொது, அந்த பெண் மலாஞ்சாவிலிருந்து ஹௌராவுக்குப் பயணித்தனர். இதையடுத்து, அந்த பெண்ணுக்கு சிலர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர். இதை, பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து அந்த பெண்மணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார், "என்று அவர் தெரிவத்தார்.
இதையடுத்து, காவல்துறையினர் ஆரம்ப கட்ட விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட மூவர் என்று தெரியவந்தது. ஷேக் பர்வீஸ், ஷேக் முஜிபார் மற்றும் ஷேக் அப்டாப் ஆகியோர் டையாளம் காணப்பட்டனர். இவர்கள் மூவரும் ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலைக்கு வேலை செய்கின்றனர். இதை தொடர்ந்து, இவர்களை கைது செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், அந்த பெண்ணிடம் அவரது தொலைபேசி என்னை கேட்டு தொந்தரவு செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.