சீரம் நிறுவனத்தின் CEO அதார் பூனவல்லாவுக்கு "Y" பிரிவு பாதுகாப்பு; காரணம் என்ன

தடுப்பூசி விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மாநிலங்களுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி விலையை SII குறைத்தது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 29, 2021, 07:04 AM IST
சீரம் நிறுவனத்தின் CEO அதார் பூனவல்லாவுக்கு "Y" பிரிவு பாதுகாப்பு; காரணம் என்ன title=

புனேவில் உள்ள, சோவிஷீல்ட் கொரொனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அதார் பூனவல்லாவிற்கு  பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி  ஏப்ரல் 16-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, அந்நிறுவனத்தின் இயக்குநர் கடிதம் எழுதியிருந்தார். கொரோனா தடுப்பூசி பொருட்கள் தொடர்பாக பூனவல்லாவுக்கு பல்வேறு தரப்பிடம் இருந்து அச்சுறுத்தல்கள்  வருவதாகவும், அதனால், அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதை அடுத்து சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனவல்லாவுக்கு ”Y" பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின்படி, இனி அதார் பூனவல்லா எங்கு பயணம் செய்தாலும் அவருக்கு மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF)  வீரர்கள் பாதுகாப்பு அளிப்பர்.

ALSO READ | கொரோனா நோயாளிகள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் Prone Positioning

கொரோனா வைரஸுக்கான (Corona Virus) கோவிஷீல்ட்  தடுப்பு மருந்தை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, மாநில அரசுகளுக்கு ரூ.400 விலையிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 விலையிலும்,  மத்திய அரசுக்கு ரூ.150 விலையிலும் விற்பனை செய்யப்படும்  என சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது.      

அதன் பின், தடுப்பூசி விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மாநிலங்களுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி விலையை, ரூ.400லிருந்து ரூ.300க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது. கோவிஷீல்டு தடுப்பூசி விலை குறைப்பு உடனே அமலுக்கு வருகிறது எனவும் சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில், வருகிற மே மாதம் 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | ரஷ்யாவின் Sputnik V இந்தியாவிற்கு விரைவில் வருகிறதா; ரஷ்ய முதலீட்டு நிதியம் தகவல்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News