October 1 முதல் மாறுகின்றன சுகாதாரக் காப்பீட்டின் பல விதிகள்: விவரம் உள்ளே!!

அக்டோபர் 1, 2020 முதல் சுகாதாரக் காப்பீடு தொடர்பான பல மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 28, 2020, 05:30 PM IST
  • அக்டோபர் 1 முதல் மேலும் பல நோய்கள் சுகாதார காப்பீட்டுக் கொள்கையின் கீழ் சேர்க்கப்படும்.
  • சுகாதார காப்பீட்டில் செலுத்தப்படும் பிரீமியமும் உயரக்கூடும்.
  • பிற நிறுவனங்களின் பாலிசிகளுக்கு மாறும்போது, ​​பழைய காத்திருப்பு காலம் சேர்க்கப்பட வேண்டும்.
October 1 முதல் மாறுகின்றன சுகாதாரக் காப்பீட்டின் பல விதிகள்: விவரம் உள்ளே!! title=

புதுடில்லி: அக்டோபர் 1, 2020 முதல் சுகாதாரக் காப்பீடு (Health Insurance) தொடர்பான பல மாற்றங்கள் ஏற்படக்கூடும். சுகாதார காப்பீட்டைப் பெற்றபின் காத்திருப்பு காலம், நிறுவனங்களால் காப்பீட்டு தொகை கோரிக்கை நிராகரிப்பு, மேலும் பல நோய்களை சுகாதாரப் பாதுகாப்பில் சேர்ப்பது ஆகியவற்றுக்கு புதிய விதிமுறைகள் பொருந்தும். இருப்பினும், சுகாதார காப்பீட்டை எடுக்கும் நுகர்வோர் சுகாதார காப்பீட்டில் செலுத்தப்படும் பிரீமியமும் உயரக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அக்டோபர் 1, 2020 முதல் தொடங்கக்கூடிய சில முக்கிய விதிகளை இங்கே காணலாம்.

சுகாதாரக் காப்பீட்டின் பாதுகாப்பு பரவலாக மாறும். மேலும் பல நோய்கள் சுகாதார காப்பீட்டுக் கொள்கையின் கீழ் சேர்க்கப்படும்.

காப்பீட்டு சேர்க்கைக்கு வெளியே இருக்கும் நிரந்தர நோய்களின் எண்னிக்கை 17 ஆகக் குறைகிறது. இதற்கு முன்னர் விலக்கு 30 நோய்களுக்கு இருந்தது. அது இப்போது 17 ஆகக் குறைக்கப்படும். அதாவது உங்கள் பிரீமியம் உயரக்கூடும்.

பல சுகாதார காப்பீட்டு திட்டங்கள் 5 முதல் 20 சதவிகிதம் பிரீமியம் (Premium) உயர்வைக் காணக்கூடும்.

புதிய விதிகளில் மன நோய்கள், மரபணு நோய்கள், மனவியல் தொடர்பான நோய்கள் போன்றவையும் சேர்க்கப்படலாம்.

நியூரோ கோளாறு, வாய்வழி கீமோதெரபி, ரோபோடிக் அறுவை சிகிச்சை, ஸ்டெம் செல் சிகிச்சை போன்றவை சேர்க்கப்படலாம்.

‘முன்பே இருப்பதாக’ விவரிக்கப்பட நோய்களின் நிபந்தனைகள்: 48 மாதங்களுக்கு முன்பு மருத்துவர் குறிப்பிட்ட எந்த வியாதியும் முன்பே இருக்கும் வியாதிகள் என வகைப்படுத்தப்படலாம். பாலிசி வெளியான 3 மாதங்களுக்குப் பிறகு, நீங்கள் ஏதேனும் அறிகுறிகளைப் பெற்றால், அது முன்பே இருக்கும் வியாதிகளின் கீழ் வகைப்படுத்தப்படும்.

8 ஆண்டுகளுக்குப் பிறகு எந்தவொரு கோரிக்கையும் நிராகரிக்கப்படாது: நீங்கள் பிரீமியம் செலுத்திய 8 ஆண்டுகளுக்குப் பிறகு எந்த உரிமைகோரலும் நிராகரிக்கப்படாது. நுகர்வோர் 8 ஆண்டுகளாக பிரீமியம் செலுத்தியிருந்தால் பாலிசிகளுக்கு மறு மதிப்பீடு எதுவும் பொருந்தாது. விகிதத்தில் குறைப்பு இருக்காது.

மருந்தகம், உள்வைப்பு (Implant) மற்றும் நோயறிதல் ஆகியவை மருத்துவச் செலவுகளாக இணைக்கப்படாது. அதாவது அதற்கான முழு claim-மையும் நீங்கள் பெறுவீர்கள்.

ALSO READ: October 1 முதல் மாறப்போகும் 5 முக்கிய விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

இருப்பினும், தொடர்புடைய மருத்துவ செலவுகள் சேர்க்கப்படுவதால், உங்களுடைய தொகை குறைக்கப்படலாம். மருத்துவமனை அறை வாடகை தொகுப்புக்கான செலவுகளை ஒதுக்குவதில் இது காணப்படலாம். ஐ.சி.யூ கட்டணங்களுக்கான க்ளெயிம்களின் விகிதக் குறைப்பு எதுவும் செய்யப்படாது.

நிறுவனத்தின் தேர்வு: உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட காப்பீட்டுக் பாலிசி (Insurance Policy) இருந்தால், உங்கள் க்ளெயிமை நீங்கள் தேர்வு செய்யலாம். ஒரு நிறுவனத்திடமிருந்து கோரப்பட்ட தொகையை தீர்த்துக் கொண்ட பிறகு, மீதமுள்ள தொகையை மற்ற நிறுவனத்திடமிருந்து கோரலாம். 30 நாட்களில் claim-களை நிராகரித்தல் அல்லது ஏற்றுக்கொள்ளுதல்.

பிற நிறுவனங்களின் பாலிசிகளுக்கு மாறும்போது, ​​பழைய காத்திருப்பு காலம் சேர்க்கப்பட வேண்டும்.

டெலிமெடிசின்களின் (Telemedicine) செலவுகள் claim-களில் சேர்க்கப்பட வேண்டும். சிகிச்சைக்கு முன்னும் பின்னும் பயன்படுத்தப்படும் டெலிமெடிசின்கள் இதில் அடங்கும். OPD கவரேஜ் பாலிசி (OPD Coverage Policy) உள்ளவர்களுக்கு டெலிமெடிசின்களின் முழு காப்பீடுத் தொகையும் கிடைக்கும்.

ALSO READ: Bank Holiday: அக்டோபரில் வங்கிகள் 15 நாட்களுக்கு மூடப்படும், முழு விவரம் இங்கே பார்க்கவும்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News