பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, முத்தமிடுவது இயற்கைக்கு மாறான குற்றம் அல்ல என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 14 வயது சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கு விசாரணையில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377ன் கீழ் முத்தமிடுவதும், காதலிப்பதும் இயற்கைக்கு மாறான குற்றங்கள் அல்ல என்று கூறி குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
முத்தம் தொடர்பான பம்பாய் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு
இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதி அனுஜா பிரபுதேசாய் கூறும்போது, “பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் மற்றும் முதல் தகவல் அறிக்கையில் (எப்ஐஆர்) , பாதிக்கப்பட்ட சிறுவனின் அந்தரங்க பாகங்களை தொட்டதாகவும், உதட்டில் முத்தமிட்டதாகவும் தெரிவிக்கிறது. " எனது பார்வையில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377ன் கீழ் முத்தம் இடுவது கடுமையான குற்றமல்ல.' என்றார்.
மேலும் படிக்க | உடல் உறவுக்கு பின் திருமணத்துக்கு மறுப்பது மோசடியாகாது: மும்பை உயர்நீதிமன்றம்
பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை தாக்கல் செய்த மனு
வழக்கில் பதிவான முதல் தகவல் அறிக்கையில், சிறுவனின் தந்தை தனது அலமாரியில் வைத்திருந்த பணத்தைக் காணவில்லை என்றும், அது குறித்து விசாரித்த போது, ஆன்லைன் கேமை ரீசார்ஜ் செய்ய குற்றம் சாட்டப்பட்டவருக்கு பணம் கொடுத்ததாக அவரது மைனர் மகன் அவர்களிடம் கூறியதாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த நபர் ஒருமுறை அவனை முத்தமிட்டதாகவும், அவனது அந்தரங்க உறுப்பைத் தொட்டதாகவும் சிறுவன அப்போது தனது தந்தையிடம் கூறியுள்ளான்.
போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் நடவடிக்கை
பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை காவல்துறையை அணுகி போக்சோ சட்டம் மற்றும் பிரிவு 377 கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்தார். iஎனினும், சிறுவனின் மருத்துவ பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்படவில்லை என்று நீதிபதி பிரபுதேசாய் கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்கனவே ஒரு வருடம் காவலில் இருந்ததால் அவருக்கு ஜாமீன் வழங்கப்படும் என்றும் நீதிபதி கூறினார். 30,000 ஜாமீன் தொகையை வழங்குமாறு குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும் படிக்க | ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் வன்முறை ஆகாது: மும்பை நீதிமன்றத்தின் வினோத தீர்ப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR