எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியீடு - எங்கு எப்படி தெரிந்துக்கொள்வது?

Kerala SSLC 10th Result 2021: எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு 2021 வெளியீடு எங்கு, எப்படி தெரிந்துக்கொள்வது? முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 14, 2021, 02:48 PM IST
எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியீடு - எங்கு எப்படி தெரிந்துக்கொள்வது? title=

Kerala SSLC 10th Result 2021: கேரள பரீக்ஷா பவன் எஸ்.எஸ்.எல்.சி, 10 ஆம் வகுப்பு தேர்வுக்கான முடிவை இன்று (ஜூலை 14) அறிவித்துள்ளது. 10 ஆம் வகுப்பு முடிவு இப்போது keralaresults.nic.in என்ற இணையதளத்தில் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி 99.47 சதவீதத்தைத் தொட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகளுடன் டி.எச்.எஸ்.எல்.சி (THSLC) மற்றும் ஏ.எச்.எஸ்.எல்.சி (AHSLC) ஆகியவற்றுக்கான முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.

கேரள எஸ்.எஸ்.எல்.சி முடிவு 2021: எவ்வாறு சரிபார்க்க வேண்டும்

- அதிகாரப்பூர்வ வலைத்தளமான keralaresults.nic.in மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

- உங்கள் ரோல் எண் மற்றும் தேவையான பிற விவரங்களை உள்ளிடவும்

- சமர்ப்பி (submit) என்பதைக் கிளிக் செய்க

- உங்கள் 10வது தேர்வு முடிவு 2021 திரையில் காண்பிக்கப்படும்

- எதிர்கால தேவைக்காக கேரள எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவை பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும்.

கேரள எஸ்.எஸ்.எல்.சி முடிவு 2021: எந்த வலைத்தளங்கள் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்

- keralapareekshabhavan.in
- sslcexam.kerala.gov.in
- results.kite.kerala.gov.in
- results.kerala.nic.in
- sietkerala.gov.in
- prd.kerala.gov.in

ALSO READ |  தமிழ்நாட்டில் +2 மார்க் எப்பொழுது வெளியிடப்படும்? மதிப்பெண் சரிபார்க்கும் பணி நிறைவு

கேரள எஸ்.எஸ்.எல்.சி முடிவு 2021: செயலி மூலம் எவ்வாறு தெரிந்துக்கொள்ளலாம்
மாணவர்கள் தங்கள் கேரள 10 வது தேர்வு முடிவு 2021 ஐ மொபைல் செயலி மூலமாக தெரிந்துக்கொள்ள விரும்பினால், கேரள மக்கள் தொடர்புத் துறையால் நடத்தப்படும் ஆண்ட்ராய்டு பயன்பாடான "பிஆர்டி லைவ்" (PRD Live) மூலமாகவும் அணுகலாம்.

4.2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி:
ஏப்ரல் மாதம் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 4.2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இருப்பினும், கோவிட் -19 இரண்டாவது அலை காரணமாக நடைமுறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News