Winter Olympics 2022: பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் ஆரிப் கான்

24வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்குகிறது... நாளை முதல் 20ம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 3, 2022, 02:20 PM IST
  • குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்கும்
  • பிப்ரவரி 4 முதல் 20 வரை சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறும்
  • இந்தியாவின் சார்பில் ஒரே ஒரு தடகள வீரராக ஆரிப் கான் பங்கேற்கிறார்
Winter Olympics 2022: பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் ஆரிப் கான் title=

இருபத்தி நான்காவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறவிருக்கிறது.நாளை முதல் (2022, பிப்ரவரி 4-ம் தேதி) 20ம் தேதி வரை நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை சீனா நடத்துகிறது.

கோடைகால மற்றும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் முதல் நகரம் பெய்ஜிங் நகரம் என்பது குறிப்பிடத்தக்கது. சீனா 3.9 பில்லியன் அமெரிக்க டாலர்க3 லவில் இந்தப் போட்டிகளை நடத்துகிறது.  

உலகம் முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்தல் இருந்தாலும், பெய்ஜிங்கில் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன.
எனவே, ஒலிம்பிக் தொடர்பான நிகழ்வுகள் மிகுந்த கட்டுப்பாடுகளோடு நடத்தப்படும். 

ALSO READ | ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட்டின் எந்த வடிவம் சேர்க்கப்படும்? 

ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டம், விளையாட்டு வீரர்கள் மற்றும் பணியாளர்கள் நிரம்பிய ஒரு மூடப்பட்ட வளையத்திற்குள் தான் நடைபெற உள்ளது. 

குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான இறுதி கவுண்ட்-டவுன் பாரம்பரிய தீப தொடர் ஓட்டத்துடன் தொடங்கியது. நேற்று காலை ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது, அடுத்த 3 நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி செல்வார்கள்.

sports
இந்தியாவின் சார்பில் ஆரிஃப் கான் ஒலிம்பிக் சுடரை எடுத்துச் செல்வார். இந்தியாவின் பனிச்சறுக்கு வீரரான இவர், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர். 

தற்போது ஆரிஃப் மட்டுமே, இந்தியாவின் சார்பில் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் கலநதுக் கொள்ளும் ஒரே வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்ல, எந்த ஒரு குளிர்கால விளையாட்டிலும் இந்தியா ஒலிம்பிக் பதக்கம் வென்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இதுவரை 127 சர்வதேச போட்டிகலில் பங்கேற்றுள்ள ஆரிஃப் கானுக்குக் கடந்த ஆண்டுவரை ஸ்பான்சர்ஷிப் கிடைப்பதே சிரமாமாக இருந்தது. 

ஆரிஃப், பியாங்சாங்கில் 2018 குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்க விரும்பினாலும், அவருக்கு போதுமான நிதியுதவி கிடைக்கவில்லை. 

sports

தற்போது, ​​ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு, ஆரிஃப் கானுக்கு நிதியுதவி வழங்குகிறது. காஷ்மீரை சேர்ந்த ஆரிஃபின் 40 சதவீத நிதி உதவியை விளையாட்டு மேலாண்மை நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ ஸ்போர்ட்ஸ் வழங்கும் நிலையில், மீதி செலவை அவர், தனது குடும்பத்தினரின் உதவியுடன் ஈடுகட்டுகிறார்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, ஆரிப்பின் பயிற்சிக்கு உதவுவதற்காக 10 லட்சம் ரூபாய் வழங்கினார்.

2011 இல் உத்தரகாண்டில் நடைபெற்ற தெற்காசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் ஸ்லாலோம் மற்றும் ஜெயண்ட் ஸ்லாலோம் போட்டிகளில் ஆரிஃப் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

sports

ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்மார்க்கில் நடைபெற்ற கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளின் இரண்டு பதிப்புகளிலும் அவர் பங்கேற்றுள்ளார்.

பிப்ரவரி 13 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடைபெறும் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் ஆரிஃப் கான் பங்கேற்கிறார்.

ALSO READ | U19 WC அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த இந்திய அணி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News