மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த வாரம் இந்தோ-அமெரிக்கா உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் தொடர்பாக அமெரிக்காவுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். 5 நாள் பயணமாக அமெரிக்கா செல்லவிருந்த நிலையில், தனது பயணத்தை திடீரென தள்ளிவைத்துள்ளார்.
பாராளுமான்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 18-ம் தேதி துவங்க உள்ளதால் ராஜ்நாத்சிங்கிற்கு பணி அதிகமாக உள்ளது. இதனால், அமெரிக்க சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகீதின் பயங்கரவாதி பர்ஹான் வானி கொல்லப்பட்டதால், அங்கு ஏற்பட்டுள்ள அமைதியின்மை காரணமாகத்தான் இந்த சுற்றுப்பயணம் தள்ளிவைப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மீண்டும் ராஜ்நாத் சிங் எப்போது அமெரிக்கா செல்வாரா என்று தெரிவிக்கவில்லை.