காஷ்மீர் தனி நாடு: பீகார் பள்ளி வினாதாளில் சர்ச்சையான கேள்வி

Last Updated : Oct 11, 2017, 02:15 PM IST
காஷ்மீர் தனி நாடு: பீகார் பள்ளி வினாதாளில் சர்ச்சையான கேள்வி title=

கடந்த அக்டோபர் 5 ம் தேதி பீகாரில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் மத்திய அரசின் சர்வ ஷிக்சா அபியான் திட்டத்தின் கீழும், பீகார் பள்ளி திட்ட கழகத்தின் கண்காணிப்பிலும் செயல்படும் அமைப்பால் தயார் செய்யப்பட்டு, பீகாரில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில், கீழ்வரும் 5 நாடுகளில் வசிக்கும் மக்களை எப்படி அழைப்பார்கள் என கேட்கப்பட்டு, சீனா, நேபாளம், இங்கிலாந்து, காஷ்மீர், இந்தியா என குறிப்பிடப்பட்டுள்ளது. காஷ்மீர் தனி நாடு என கூறும் வகையிலும் கேட்கப்பட்டுள்ள இந்த கேள்வி புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

 

 

இது தொடர்பாக வைஷாலி மாவட்ட கல்வி அதிகாரி சங்கீத் சின்காவிடம் கேட்டதற்கு, நான் விடுமுறையில் இருந்ததால் இது பற்றி எனக்கு தெரியாது. இது விவகாரம் குறித்து விசாரிக்கிறேன் என பதிலளித்துள்ளார்.

பீகார் கல்வி திட்ட கழக அதிகாரி பிரேம் சந்திராவிடம் கேட்டதற்கு, இது அசு்சுப்பிழையாக இருக்கலாம். இது எப்படி நடந்தது என தெரியவில்லை என அனைவரும் ஒவ்வொருவராக மழப்பிக்கொண்டே வந்தனர். தற்போது இந்த வினாதாள்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அச்சிடப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

Trending News