ராஜினாமா கடிதம் கொடுத்த கர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும், சபாநாயகர் முன்பு மாலை 6 மணிக்குள் ஆஜராக உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!!
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்பட 16 பேர் ராஜினாமா செய்துள்ளனர். மேலும் 2 சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். மேலும், அதிருப்தி எம்எல்ஏக்கள் 8 பேர் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளதால் குமாரசாமி அரசு தனது பெரும்பான்மையை இழந்துள்ளது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் முன்னதாக சட்டசபை மாண்புகளை காப்பாற்றுவதற்காக, இன்று அவசரமாக அமைச்சரவையைக் கூட்ட முதலமைச்சர் குமாரசாமி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர், ஆட்சியை கலைக்க ஆளுநருக்கு பரிந்துரைக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, பெங்களூரு சட்டப்பேரவை வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 14ஆம் தேதி வரை நான்கு நாட்கள், இந்த உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரசை சேர்ந்த 7 பேர் மற்றும் ம.ஜ.த.வைச் சேர்ந்த மூன்று பேர் என 10 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், எங்களுடைய ராஜினாமாவை ஏற்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. மாநில அரசுக்கு சாதகமாக சபாநாயகர் செயல்படுகிறார். எங்களுடைய ராஜினாமாவை ஏற்காமல் தகுதி நீக்கம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். எங்கள் ராஜினாமா கடிதத்தை உடனே ஏற்கும்படியும், தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும், என மனுவில் கூறப்பட்டுள்ளது.
The Supreme Court says Karnataka Speaker has to take a decision in remaining part the day. The Court also ordered the DGP of Karnataka to provide protection to all the rebel MLAs and adjourned the hearing for tomorrow (July 12). https://t.co/ih2fE1AKR3
— ANI (@ANI) July 11, 2019
இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் இவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகி இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும' என்றார். மேலும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் இன்று மாலை 6 மணிக்குள் சபாநாயகர் முன்பு ஆஜராகி ராஜினாமா கடிதத்தை வைக்கலாம். இது குறித்து, சபாநாயகர் இன்றே முடிவு எடுக்க வேண்டும். எம்எல்ஏக்களுக்கு போலீஸ் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.