ஒத்திவைக்கப்பட்ட கர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல் டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது!!
டெல்லி: அக்டோபர் 21 ஆம் தேதி கர்நாடகாவில் 15 சட்டசபை இடங்களுக்கான இடைத்தேர்தலை ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றத்திற்கு அறிவித்த ஒரு நாள் கழித்து, தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. டிசம்பர் 5 ஆம் தேதி மாநிலத்தில் இடைத்தேர்தல்கள் நடைபெறும் என்றும் டிசம்பர் 9 அன்று வாக்குகள் எண்ணப்படும் என அறிவித்துள்ளது.
Karnataka by-polls to be held on Dec 5: EC
Read @ANI Story | https://t.co/zXmUOtMHIE pic.twitter.com/Tx3lxBp6LQ
— ANI Digital (@ani_digital) September 28, 2019
கர்நாடக மாநிலத்தில் முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி ஆட்சிக்கு நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததால் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் உள்பட 17 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த நடவடிக்கையை எதிர்த்து அவர்கள் 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதற்கிடையில், கர்நாடகா மாநிலத்தில் காலியாக உள்ள 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட தங்களை அனுமதிக்க வேண்டும் என தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 ஏம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், விசாரணை முடிவடையாததால் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா? என தேர்தல் ஆணையத்திடம் கேட்டது. இதையடுத்து, கர்நாடகா இடைத்தேர்தலை ஒத்திவைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் அறிவித்தது. இந்நிலையில், கர்நாடகாவில் ஒத்திவைக்கப்பட்ட 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் எனவும், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.