கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் விபத்து: யார் காரணம்? TA 912 ஆவணம் மூலம் வெளிவந்த புதிய தகவல்

Kanchanjungha Express Train Accident: ராணிபத்ரா ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர், அனைத்து சிவப்பு சிக்னல்களையும் கடப்பதற்கான எழுத்துப்பூர்வ அதிகாரமான TA 912 ஆவணத்தை சரக்கு ரயில் ஓட்டுநருக்கு வழங்கியதாக ரயில்வே ஆதாரத்தை மேற்கோள் காட்டி PTI அறிக்கை தெரிவித்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 17, 2024, 07:32 PM IST
  • கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து.
  • தானியங்கி சமிக்ஞை அமைப்பு தோல்வியடைந்தது.
  • TA 912 ஆவணம் என்றால் என்ன?
கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் விபத்து: யார் காரணம்? TA 912 ஆவணம் மூலம் வெளிவந்த புதிய தகவல் title=

Kanchanjungha Express Train Accident: கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து இன்று நாட்டு மக்களை உலுக்கிப் போட்டது. இந்த விபத்து குறித்த உள் ஆவணங்கள் மூலம் இப்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னர் கருதப்பட்டதைப் போல இன்று காலை கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது மோதிய சரக்கு ரயிலின் லோகோ பைலட் மீது தவறு இல்லை என்பது அவற்றின் மூலம் தெரியவந்துள்ளது. தானியங்கி சமிக்ஞை அமைப்பு பணிபுரியாமல் போனதால் அனைத்து சிவப்பு சிக்னல்களையும் கடக்க லோகோ பைலட் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. 

ராணிபத்ரா ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர், அனைத்து சிவப்பு சிக்னல்களையும் கடப்பதற்கான எழுத்துப்பூர்வ அதிகாரமான TA 912 ஆவணத்தை சரக்கு ரயில் ஓட்டுநருக்கு வழங்கியதாக ரயில்வே ஆதாரத்தை மேற்கோள் காட்டி PTI அறிக்கை தெரிவித்துள்ளது. தானியங்கி சமிக்ஞை தோல்வியடைந்ததால், அனைத்து சிவப்பு சிக்னல்களையும் கடக்க லோகோ பைலட்டுக்கு ஆவணம் அங்கீகாரம் அளித்துள்ளது.

"தானியங்கி சிக்னலிங் (Automatic Signalling) தோல்வியடைந்தது. ஆகையால் RNI (ராணிபத்ரா ரயில் நிலையம்) மற்றும் CAT (சட்டர் ஹாட் சந்திப்பு) இடையே அனைத்து தானியங்கி சிக்னல்களையும் கடந்துசெல்ல உங்களுக்கு இதன் மூலம் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது" என்று TA 912 ஆவணம் கூறுகிறது.

RNI மற்றும் CAT இடையே ஒன்பது சிக்னல்கள் இருப்பதாகவும், அவை சிவப்பு அல்லது எச்சரிக்கை (மஞ்சள் அல்லது இரட்டை மஞ்சள்) என எதை காட்டினாலும், அதை புறக்கணித்து, அனைத்து சிக்னல்களையும் வேகத்துடன் கடக்க சரக்கு ரயில் ஓட்டுநருக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TA 912 Document: TA 912 ஆவணம் என்றால் என்ன?

TA912 என்பது ஒரு வகையான அதிகாரக் கடிதம் என ரயில்வே அதிகாரிகள் கூறுகிறார்கள். இது சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் மாஸ்டர் ஒரு ரயில் ஓட்டுநருக்கு வழங்கும் ஆவணம். அந்த பிரிவில் எந்த தடையும் இல்லை அல்லது எந்த ரயிலும் இல்லை என்று உறுதியாக இருக்கும்போது இது வழங்கப்படும்.

இந்த ஆவணம் ரயிலின் ஓட்டுநருக்கு அனைத்து சிவப்பு அல்லது எச்சரிக்கை சமிக்ஞைகளையும் பச்சை நிறமாக மாறும் வரை காத்திருக்காமல் கடந்து செல்ல அங்கீகாரம் அளிக்கிறது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

"ஸ்டேஷன் மாஸ்டர் ஏன் அதை செய்தார் என்பது விசாரணைக்குரிய விஷயம். முந்தைய ரயில் தனது நிலையப் பகுதியைக் கடந்து மற்றொரு பிரிவில் நுழைந்து விட்டதாக அவர் கருதி இருக்கலாம்" என்று ரயில்வே வட்டாரம் கூறியதாக செய்தி நிறுவனமான பிடிஐ தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | 'தொடரும் ரயில் விபத்துகள்... தடுக்கும் Kavach வேலை செய்யவில்லையா?' - ரயில்வேயின் பதில்

தானியங்கி சமிக்ஞை அமைப்பு தோல்வியடைந்தது

RNI மற்றும் CAT இடையேயான தானியங்கி சமிக்ஞை அமைப்பு திங்கள்கிழமை காலை 5.50 மணி முதல் பழுதடைந்துள்ளதாக ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரயில் எண். 13174 (சீல்டா-கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ்) காலை 8:27 மணிக்கு ரங்கபாணி நிலையத்திலிருந்து புறப்பட்டு RNI மற்றும் CAT இடையே நிறுத்தப்பட்டது. ரயில் நின்றதற்கான காரணம் தெரியவில்லை என்று கூறப்படுகின்றது. 

தானியங்கி சிக்னலிங் அமைப்பு தோல்வியுற்றால், ஸ்டேஷன் மாஸ்டர் TA 912 எனப்படும் எழுத்துப்பூர்வ அதிகாரத்தை வழங்குகிறார். அது குறைபாடு காரணமாக பிரிவில் உள்ள அனைத்து சிவப்பு சமிக்ஞைகளையும் கடக்க ஓட்டுநருக்கு அங்கீகாரம் அளிக்கிறது என்று மற்றொரு அதிகாரி விளக்கினார்.

ராணிபத்ராவின் ஸ்டேஷன் மாஸ்டர் ரயில் எண் 1374க்கு (சீல்டா-கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ்) TA 912 ஐ வழங்கியிருந்தார் என்றும் கூறப்படுகின்றது. அதே நேரத்தில், GFCJ என்ற சரக்கு ரயில் ரங்கபாணியிலிருந்து காலை 8:42 மணிக்குப் புறப்பட்டு 8:55 மணிக்கு 13174 எண் ரயிலின் மீது பின்புறத்திலிருந்து மோதியது. இதன் விளைவாக பயணிகள் ரயிலின் கார்ட் பெட்டி, இரண்டு பார்சல் பெட்டிகள் மற்றும் ஒரு பொது இருக்கை பெட்டி தடம் புரண்டன.

முன்னதாக, ரயில்வே வாரியம் அதன் ஆரம்ப அறிக்கையில், சரக்கு ரயிலின் ஓட்டுநர் சிக்னலை மீறியதால், கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் (Kanchenjunga Express) மீது மோதியதாகவும் அதனால் குறைந்தது 9 பேர் இறந்தனர், 39 பேர் காயமடைந்தனர் என்றும் கூறியது. இன்று காலை 8:55 மணியளவில் அசாமின் சில்சார் முதல் கொல்கத்தாவில் உள்ள சீல்டா வரை இயங்கும் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ், திரிபுராவின் அகர்தலாவில் இருந்து சீல்டாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​ரங்கபானி நிலையத்திற்கு அருகிலுள்ள ரூயிடோசா என்ற இடத்தில் சரக்கு ரயில் பின்னாலிருந்து அதை மோதி விபத்து ஏற்பட்டது. 

மேலும் படிக்க | கடந்த ஆண்டு கோரமண்டல்! இந்த ஆண்டு காஞ்சன்ஜங்கா! பாதுகாப்பற்றதாக மாறும் ரயில்வே?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News