சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் நேற்று முன்தினம் திடீரென போர்க்கொடி உயர்த்தினர். வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி பாரபட்சம் காட்டுவதாக அவர்கள் செய்தியாளர்களிடம் கூட்டாக தெரிவித்தனர்.
சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக நிகழ்ந்துள்ள இந்த நீதிபதிகளின் மோதல் போக்கு, நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை கிளப்பி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் கவலையை வெளியிட்டு வருகின்றன. மேலும் அங்கு நடைபெறும் நிகழ்வுகளை மத்திய அரசும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இதற்கிடையில், நீதிபதிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிளவை சமரசமாக முடித்து வைப்பதற்காக, இந்திய பார் கவுன்சில் களம் இறங்கியுள்ளது. அதிருப்திக்குள்ளாகியுள்ள நீதிபதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த 7 உறுப்பினர்கள் கொண்ட குழுவை இந்திய பார் கவுன்சில் அமைத்துள்ளது. இந்த 7 பேர் அடங்கிய சமரச குழுவினர், இன்று இரவு 7.30 மணியளவில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், அதிருப்தியை வெளிப்படுத்திய நீதிபதி செலமேஸ்வரை அவரது இல்லத்தில் பார் கவுன்சில் குழு சந்தித்தது. உச்ச நீதிமன்றத்தின் ஏனைய மூத்த நீதிபதிகளையும் பார் கவுன்சில் குழு சந்தித்து பேசதிட்டமிட்டுள்ளது.
Bar Council of India delegation leaves after meeting Justice Chelameswar, member says 'will react after meeting Chief Justice of India & other three judges in the evening' pic.twitter.com/G2bGdXyn74
— ANI (@ANI) January 14, 2018
Delhi: Bar Council members including Chairman Manan Mishra arrive at #JusticeChelameswar 's residence pic.twitter.com/tpVANpMyBa
— ANI (@ANI) January 14, 2018