திரு.பிரணாப் முகர்ஜீ குறித்த போலி செய்தியை பதிவிட்ட பிரபல பத்திரிக்கையாளர் ராஜ்தீப் ..!!!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீ குறித்த போலி செய்தியை பதிவிட்ட பிரபல பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசாய், நெட்டிசன்கள் ட்ரோல் செய்ததை அடுத்து அதை நீக்கினார்.

Last Updated : Aug 13, 2020, 02:52 PM IST
  • 84 வயதான முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீ, திங்கள்கிழமை (ஆகஸ்ட் 10) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  • சிகிச்சையின் போது நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரொனா தொற்று இருப்பது தெரியவந்தது.
  • திரு.பிரணாப் முகர்ஜீ ஜூலை 2012 முதல் 2017 வரை குடியரசுத் தலைவராக பணியாற்றினார்.
திரு.பிரணாப் முகர்ஜீ குறித்த போலி செய்தியை பதிவிட்ட பிரபல பத்திரிக்கையாளர் ராஜ்தீப் ..!!!  title=

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீயின் உடல் நிலை கடந்த மூன்று நாட்களாக  கவலைக்கிடமாக உள்ளது. அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாம்ல இருக்கும், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இறந்துவிட்டார் என்று பிரபல பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசாய் ட்வீட் செய்தார்.  

போலி செய்தி ட்வீட் செய்யப்பட்ட உடனேயே, பிரணாப் முகர்ஜியின் மகனும் மகளும் அவரது உடல்நிலை குறித்து தெளிவுபடுத்தி, பிரபல பத்திர்க்கையாளர்கள் போலி செய்திகளை பரப்புகின்றனர் என்று பதில் ட்வீட் செய்தனர். இதனை தொடர்ந்து  நெட்டிசன்கள் ட்ரோல் செய்த பிறகு, முதலில் மன்னிப்பு கேட்டு பிறகு ட்வீட்டை நீக்கினார்.

ALSO READ | நேர்மையாக வரி செலுத்துவோர் வாழ்க்கை மாறும் போது நாடு முன்னேறும்: பிரதமர் மோடி

முகர்ஜியின் மகன் அபிஜித் தனது தந்தை திரு.பிரணாப் முகர்ஜி இன்னும் உயிருடன் இருக்கிறார். சமூக ஊடகங்களில் புகழ்பெற்ற பத்திரிகையாளர்களால் பரப்பப்படும் ஊகங்கள் மற்றும் போலி செய்திகள் இந்தியாவில் ஊடகங்கள் போலி செய்திகளின் தொழிற்சாலையாக மாறிவிட்டன என்பதை தெளிவாக பிரதிபலிக்கிறது" என்று அபிஜித் முகர்ஜி ட்வீட் செய்துள்ளார்.

முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தாவும் "தனது தந்தையைப் பற்றிய வதந்திகள் பொய்யானவை" என்று ட்வீட் செய்துள்ளார்.

முன்னாள்அதிபர் பிரணாப் முகர்ஜீ தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில்  அவரது உடல்நிலையில் மாற்றம் ஏதும் இல்லை என குறிப்பிட்டு இருந்தது. 

84 வயதான முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீ, திங்கள்கிழமை (ஆகஸ்ட் 10) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

சிகிச்சையின் போது நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரொனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது எனவும், அதனால் சமீபத்தில் தன்னுடன் தொடர்பில் வந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள்மாறு கேட்டுக் கொண்டு அவரே ட்வீட் செய்திருந்தார்.

மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் முகர்ஜியின் மூளையில் ஒரு இரத்த உறைவு இருப்பது தெரியவந்தது, அதற்காக அவர் அவசரகால உயிர் காக்கும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அறுவைசிகிச்சைக்குப் பின்னர்  அவர் தற்போது வெண்டிலேட்டரின் உதவியுடன் சுவாசித்து வருகிறார்.

இந்தியாவின் 13 வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு முகர்ஜி காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்தார். ஜூலை 2012 முதல் 2017 வரை குடியரசுத் தலைவராக பணியாற்றினார்.

Trending News