இந்திய குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல்; BSF தக்க பதிலடி

ஜம்மு - காஷ்மீரின் (Jammu Kashmir) ஹிரானகர் (Hira Nagar) பகுதியில் மக்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய பாகிஸ்தான்

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 13, 2019, 10:19 AM IST
இந்திய குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல்; BSF தக்க பதிலடி title=

புதுடெல்லி: பாகிஸ்தானின் (Pakistan) ரேஞ்சர்ஸ் நேற்று (சனிக்கிழமை) இரவு மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு - காஷ்மீரின் (Jammu Kashmir) ஹிரானகர் (Hira Nagar) பகுதியில் மக்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5:30 மணி வரை துப்பாக்கிச் சூடு தொடர்ந்தது. அண்டை நாட்டின் இந்த நடவடிக்கைக்கு இந்தியாவின் பாதுகாப்புப் படையினர் (Border Security Force) தக்க பதிலடியை அளித்தனர். 

ஜம்மு - காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டுக் கோடு (Line of Control) அருகே பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதலை மேற்கொண்டபோது ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டு ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

ஜம்மு மாவட்டத்தின் அக்னூர் செக்டரில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலை மேற்கொண்டதையடுத்து இரண்டு ஜவான்களும் காயமடைந்தனர். அதேபோல இன்றும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நவ்ஷெரா துறையில் அதிகாலை 5.50 முதல் காலை 7.30 மணி வரை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

Trending News