மும்பை 26/11 பயங்கரவாத தாக்குதல்களில் பெற்றோரை இழந்த மோஷே ஹோல்ட்ஸ்பெர்க் மும்பையில் மீண்டும் வந்தார். மும்பையில் அவர் உயிர் தப்பியபோது அவருக்கு இரண்டு வயது. மோஷே இந்த நிமிடம் உயிருடன் இருக்க முக்கியக் காரணம் 46 வயதான சான்ட்ரா சாமுவேல்தான்.
கோவாவைச் சேர்ந்த கிறிஸ்தவப் பெண்மணி. மோஷேவின் தந்தை நடத்தி வந்த கலாச்சார மையத்தில் இவர் அவர்களுடன் தங்கி கைக்குழந்தையான மோஷேவைப் பார்த்துக் கொண்டவர்.
பெற்றோரை விட அதிக நேரம் சான்ட்ராவுடன் செலவிட்டதால் மிகுந்த ஒட்டுதலுடன் மோஷே சான்ட்ராவிடம் இருந்தார். கசாப் தலைமையிலான பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் புகுந்து வேட்டையாடியபோது மோஷேவை மிகுந்த சிரமப்பட்டுக் காப்பாற்றினார் சான்ட்ரா. தனது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றினார்.
இதையடுத்து, அவர் தாத்தா தற்போது மும்பை பாதுகாப்பான பகுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
Moshe Holtzberg(Baby Moshe), who lost his parents in the 26/11 terror attacks, arrives in Mumbai again pic.twitter.com/W3U7jL6ZLF
— ANI (@ANI) January 16, 2018
It's a very special day. Thank God that Moshe could come again. Mumbai is a lot more safe now: Rabbi Holztberg Nachman, Grandfather of Moshe Holtzberg (Baby Moshe) #Mumbai pic.twitter.com/6jEyimOZqB
— ANI (@ANI) January 16, 2018