ISKCON vs Maneka Gandhi: பாரதீய ஜனதா கட்சியின் (பாஜக) எம்பி மேனகா காந்தி சமீபத்தில் பகவான் கிருஷ்ணரை வழிபடும் சர்வதேச அமைப்பாக செயல்படும் இஸ்கான் அமைப்பு மீது பல கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனக்கூறி மேனகா காந்திக்கு இஸ்கான் நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பசுக்களை பாதுகாப்பதே எங்கள் நோக்கம் -இஸ்கான் அமைப்பு
இஸ்கான் தேசிய செய்தி தொடர்பாளர் யுதிஷ்டிர் கோவிந்த தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் பல பகுதிகளில் பசுக்களை பாதுகாப்பதில் இஸ்கான் முன்னணியில் உள்ளது. உலகம் முழுவதும் பசுக்கள் மற்றும் கன்றுக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இஸ்கான் அமைப்பு செயல்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட அமைப்பு மீது விலங்கு நல ஆர்வலர் மேனகா காந்தி குற்றம்சாட்டி இருப்பது ஆச்சர்யமாக உள்ளது
இஸ்கானுக்கு எதிரான தவறான பிரச்சாரத்தை முறியடிப்போம் -ராதாராமன் தாஸ்
கொல்கத்தா இஸ்கான் துணைத் தலைவர் ராதாராமன் தாஸ் கூறுகையில், இஸ்கானின் பக்தர்களும் ஆதரவாளர்களும் இந்த இழிவான, கண்டிக்கத்தக்க குற்றச்சாட்டுகளால் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளனர். இஸ்கானுக்கு எதிரான தவறான பிரச்சாரத்திற்கு எதிராக நீதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுவோம் எனக் கூறியுள்ளார்.
மேனகா காந்தியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது -இஸ்கான்
மேனகா காந்தியின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், ஆதாரமற்றவை என்றும் இஸ்கான் கூறியுள்ளது. அந்த அமைப்பு சார்பில், முன்னாள் மத்திய அமைச்சரின் அறிக்கைகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது.
இஸ்கான் குறித்து மேனகா காந்தி கூறியது என்ன?
சமீபத்தில் மேனகா காந்தியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், கசாப்புக் கடைகளுக்கு மாடுகளை விற்பதாக இஸ்கான் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டை அவர் கூறியிருந்தார். இதுமட்டுமின்றி, இஸ்கான் நிறுவனத்தை நாட்டின் மிகப்பெரிய மோசடி அமைப்பு என்றும் அவர் கூறினார்.
அந்த வீடியோவில் மேனகா காந்தி கூறுகையில், "இஸ்கான் மாட்டுத் தொழுவங்களை பராமரிக்கிறது. இதற்காக அரசாங்கத்திடம் இருந்து பெரும் நிலத்தை பெற்றுக் கொண்டு, அதன்மூலம் வரம்பற்ற லாபம் ஈட்டுகிறது என்று கடுமையான குற்றசாட்டை சுமத்தி உள்ளார். ஆந்திர மாநிலம் அனந்தபூரில் உள்ள மாட்டுத் தொழுவத்துக்கு சென்றிருந்தேன். அங்கு கறவை நின்றுபோன மாடுகளும் இல்லை மற்றும் கன்றுகளும் இல்லை. இஸ்கான் தனது அனைத்து மாடுகளையும் கசாப்பு கடைக்காரர்களுக்கு விற்று வருவதாக கூறியுள்ளார். அவர்களைத் தவிர வேறு யாரும் இதுபோன்ற வேலையைச் செய்வதில்லை. 'ஹரே ராம் ஹரே கிருஷ்ணா' என்று தெருக்களில் பாடுகின்றனர். தங்கள் வாழ்வாதாரமே பால் விற்பனையை நம்பியிருப்பதாகச் சொல்பவர்கள் இவர்கள்தான். பசுக்கள் மற்றும் கன்றுக்களை விற்ற அளவுக்கு வேற யாரும் செய்ய வில்லை என பகிரங்கமாக குற்றச்சாட்டி உள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ