பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முடிவே இல்லையா? 2021-ல் 46% அதிகரிப்பு; உ.பி முதலிடம்

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும், தேசிய மகளிர் ஆணையத்திற்கு சுமார் 3,248 புகார்கள் வந்துள்ளன. இது ஜூன் 2015-க்குப் பிறகு ஒரே மாதத்தில் பதிவான அதிகமான புகார் ஆகும். 

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 8, 2021, 09:48 PM IST
  • ஜூன் 2015-க்குப் பிறகு ஒரே மாதத்தில் பதிவான அதிகமான புகார்.
  • கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிராக பதிவான புகார்களை விட எண்ணிக்கை அதிகம்.
  • பெண்களுக்கு எதிரான அதிக புகாரில் உத்தரபிரதேசம், டெல்லி முதலிடத்தில் உள்ளன.
பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முடிவே இல்லையா? 2021-ல் 46% அதிகரிப்பு; உ.பி முதலிடம் title=

புது டெல்லி: கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை வழங்கப்படவில்லை, குடும்ப வன்முறை, திருமணமான பெண்களுக்கு எதிரான சித்ரவதை மற்றும் வரதட்சணை கொடுமை, பாலியல் வன்கொடுமை, பாலியல் பலாத்காரம் மற்றும் கற்பழிப்பு முயற்சி என பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிப்பு

தேசிய மகளிர் ஆணையம் அளித்த தகவலின்படி, நாட்டிலேயே உத்திரபிரதேச மாநிலத்தில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் (Violence Against Women) அதிகமாக நடக்கிறது. 2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக புகார்கள் 46 சதவிகிதம் அதிகரித்திருப்பதால், அவர்களுக்கு எதிரான வன்முறைக்கு முடிவே இல்லை எனத் தெரிகிறது. இந்தத் தகவலை தேசிய மகளிர் ஆணையம் (National Commission for Women) செப்டம்பர் 6 திங்கள் அன்று வெளியிட்டது.

என்சிடபிள்யூ (NCW) தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் (ஜனவரி டூ ஆகஸ்ட்) தேசிய மகளிர் ஆணையத்திற்கு கிட்டத்தட்ட 19,953 புகார்கள் வந்துள்ளது. கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிராக பதிவான புகார்களை விட இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதாவது கடந்த 2020  ஆம் ஆண்டு புகார்களின் எண்ணிக்கை 13,618 என ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும், தேசிய மகளிர் ஆணையத்திற்கு சுமார் 3,248 புகார்கள் வந்துள்ளன. இது ஜூன் 2015-க்குப் பிறகு ஒரே மாதத்தில் பதிவான அதிகமான புகார் ஆகும். 

ALSO READ | 14 ஆண்டுகளாக பாலியல் தொல்லை - மூன்று குழந்தைகளுக்கு தாயான பெண்

அதிக குற்றங்கள் பதிவான மாநிலங்களின் பட்டியல்:
பெண்களுக்கு எதிரான அதிக புகார்கள் பதிவான மாநிலங்களின் பட்டியலில், உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி முதலிடத்தில் உள்ளன. அதாவது அளிக்கப்பட்ட மொத்த புகார்களில் இந்த இரண்டு மாநிலங்களில் இருந்து மட்டும் பாதிக்கும் மேல் பதிவாகியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் கிட்டத்தட்ட 10,084 புகார்களும், தேசிய தலைநகரத்த்தில் இருந்து 2,147 புகார்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அரியானா 995 புகார்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து 974 புகார்கள் வந்துள்ளன.

எந்த மாதிரியான புகார்கள் பதிவாகின:
பெண்களுக்கு எதிராக குற்றங்களில் அதிகபட்சமாக கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை வழங்கப்படவில்லை என 7,036 புகார்கள், குடும்ப வன்முறைத் தொடர்பாக 4,289 புகார்கள் மற்றும் திருமணமான பெண்களுக்கு எதிரான சித்ரவதை மற்றும் வரதட்சணை கொடுமை என 2,923 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. பாலியல் வன்கொடுமை, பாலியல் பலாத்காரம் மற்றும் கற்பழிப்பு முயற்சி என 1,022 புகார்கள் மற்றும் சைபர் குற்றங்கள் தொடர்பாக 585 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ALSO READ | மனைவியை போதையாக்கி தனது நண்பர்களுக்கு காம இரையாக்கிய கணவர்..!

என்சிடபிள்யூ தலைவர் ரேகா சர்மா (Rekha Sharma) கூறுகையில், தேசிய மகளிர் ஆணையம் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதால், பெண்களுக்கு எதிரான புகார்கள் அதிகரித்து வருவது தெளிவாகத் தெரிகிறது. தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடக்கும் போது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றி பொதுமக்களுக்கு நன்கு தெரிகிறது. இதைத்தவிர, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ 24X7 ஹெல்ப்லைன் எண்ணைக் கொண்ட பல புதிய முயற்சிகளை கமிஷன் தொடங்கியுள்ளது என ரேகா கூறினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News