புது டெல்லி: பிரதம மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் சுகாதார ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் 180 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் மேலும் 180 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 1351 பேர் பலனடைந்துள்ளனர்.
கோவிட் தொற்றுநோய் நாடு முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியதால், சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீட்டு திட்டத்தின் அரசாங்கத்தின் முயற்சி மார்ச் 30, 2020 அன்று தொடங்கப்பட்டது. இது ஒரு விரிவான தனிப்பட்ட காப்பீட்டை வழங்குகிறது கோவிட் -19 நோயாளிகளின் நேரடி தொடர்பு மற்றும் கவனிப்பில் இருந்த சமூக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தனியார் சுகாதாரப் பணியாளர்கள் உட்பட 22.12 50 லட்சம் பேர் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைவார்கள்.
இந்தத் திட்டத்தின் கீழ் தனிப்பட்ட விபத்துக் காப்பீடாக பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளரின் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் வழங்கப்படும்.
Read Also | அக்டோபர் 20, 2021: இன்றைய கொரோனா நிலவரம்
இந்தக் காப்பீட்டின் காலம் அக்டோபர் 20, 2021 இல் முடிவடையவிருந்த நிலையில், இப்போது மேலும் 180 நாட்களுக்கு காப்பீட்டுத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. "கோவிட் -19 தொற்றுநோய் இன்னும் குறையாததால் மற்றும் கோவிட் தொடர்பான கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களின் இறப்புகள் பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இன்னும் தொடர்வதால், காப்பீடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவிட் -19 நோயாளிகளைப் பராமரிப்பதற்காக நியமிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களைச் சார்ந்திருப்பவர்களை தொடர்ந்து பாதுகாப்பு வளையத்தில் பாதுகாக்கும் விதத்தில் மத்திய அரசு இந்தத் திட்டத்தை நீட்டித்துள்ளது” என்று இந்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த மாதம், அங்கன்வாடி பணியாளர்களும், பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனாவின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ .50 லட்சம் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுவார்கள் என மத்திய அரசு முடிவு தெரிவித்தது.
Also Read | தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் நிலவரம்
நாடு முழுவதும் உள்ள 13,00,029 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 11,79000 அங்கன்வாடி உதவியாளர்கள் மற்றும் கோவிட் -19 தொடர்பான பிரச்சனையில் உதவி செய்தவர்கள் காப்பீட்டின் கீழ் கொண்டு வரப்படுவார்கள் என்று மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அவர்கள் காப்பீடு பெற தகுதியுடையவர்கள் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 1351 பேர் பலனடைந்துள்ளனர்.
இந்த நிலையில், கொரோனாவின் பாதிப்பு இன்னும் நாட்டில் இருக்கும் நிலையில், மேலும் 180 நாட்களுக்கு சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | ஏழை மக்களுக்கு 2 மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் கிடைக்கும்: மத்திய அரசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR