ஜீரோதா நிறுவனர் நிதின் காமத், தனது மாமனாரின் பெட்டிக்கடையைப் பற்றி டிவிட்டரில் பதிவிட்டுள்ள பாராட்டு, சமூக ஊடகங்களில் வைரலாகிறது. ஊக்கத்துடன் உழைக்கும் தனது மாமனார் மாமியாரின் வாழ்க்கையை பாராட்டும் இந்த மருமகன், 270 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதி என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?
என் வாழ்வின் உதாரண மனிதர் மாமனார் என்று சொல்லி, அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் ஜீரோதா நிறுவனர் நிதின் காமத் பதிவிட்டுள்ளார்.
Being content is the only way to true freedom. A person who embodies this is my father-in-law, Shivaji Patil
He was in the Indian Army & voluntarily retired as a Havaldar after losing his fingers to frostbite during the Kargil War. He started a grocery shop in Belgaum after. 1/5 pic.twitter.com/4svEqcQLy8— Nithin Kamath (@Nithin0dha) May 8, 2023
பெல்காமில் பெட்டிக் கடை நடத்தி வரும் தனது மாமனார் சிவாஜி பாட்டீலைப் பற்றிய மனதை உருக்கும் கதையை சமீபத்தில் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார் ஜீரோதா நிறுவனர் நிதின் காமத். இந்திய ராணுவத்தின் முன்னாள் ஹவால்தாராக இருந்த 70 வயது முதியவர், கார்கில் போரின்போது உறைபனியால் கைவிரல்களை இழந்துவிட்டார்.
மேலும் படிக்க | கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது
சோகமான அந்த சம்பவத்திற்குப் பிறகு பணிஓய்வு பெற்ற சிவாஜி பாட்டீல், பெல்காமில் ஒரு பெட்டிக் கடையைத் தொடங்கினார். சிப்ஸ் முதல் தினசரி உபயோகப் பொருட்கள் என பலதரப்பட்ட பொருட்களை விற்கும் சாதாரண பெட்டிக் கடை இது.
“என் மாமனாருக்கு 70 வயதாகிறது, ஆனால், கடைக்கு மளிகைப் பொருட்களை வாங்குவதற்காக அவர் தனது மிகவும் பழைய ஸ்கூட்டரில் உள்ளூர் சந்தைக்குச் செல்கிறார். அவருக்கு ஒரே உதவி என் மாமியார், அவர் கடை நடத்தவும் வீட்டை நிர்வகிக்கவும் உதவுகிறார்” என்று காமத் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
தனது மனைவி சீமாவும் தானும் வெற்றிகரமான தொழிலதிபர்களாக இருப்பதால், மாமனாரை கடையை மூடச் சொன்னதற்கு அவர் மறுத்துவிட்டதைக் குறிப்பிடும் காமத், வயதான காலத்தில் வேலை செய்வதை நிறுத்துங்கள் என்று சொல்வதை மறுத்த மாமனார், உழைப்பதில் தான் தனக்கு திருப்தி உள்ளதாக சொன்னதை குறிப்பிடுகிறார்.
மேலும் படிக்க | அழிவை நோக்கி செல்லும் பாகிஸ்தான்! இம்ரான் கானால் அதிகரிக்கும் சிக்கல்கள்!
“அவர் எதையாவது விரும்பியோ அல்லது ஏதாவது குறை சொல்லியோ நான் பார்த்ததில்லை, போரில் தனது விரல்களை இழந்ததைப் பற்றி கூட அவர் ஒருபோதும் வருத்தப்பட்டது இல்லை. இருப்பினும், 2007 ஆம் ஆண்டில் நான் தொழிலில் முன்னேற போராடிக்கொண்டிருந்தபோது, அவரது மகளைத் திருமணம் செய்ய அனுமதி கேட்டேன். அப்போது, அவர் என்னை அரசாங்க வேலை பெற முயற்சிக்கச் சொன்னார் ”என்று காமத் கூறினார்.
“மனம் மற்றும் உடல் ரீதியில் சுறுசுறுப்பாக இருப்பதை ஒருபோதும் நிறுத்தாமல் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. பணத்தால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது என்பதற்கு எனது மாமனார் சிறந்த உதாரணம்” என ஜீரோதா நிறுவனர் நிதின் காமத் கூறுகிறார்.
மேலும் படிக்க | அமெரிக்காவின் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு... 8 பேர் பலி... பலர் காயம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ