இந்திய-சீன வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திப்பு!

துஷன்பேயில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்திய மற்றும் சீன வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திப்பு.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 17, 2021, 10:49 AM IST
இந்திய-சீன வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திப்பு! title=

துஷன்பேயில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்திய மற்றும் சீன வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திப்பு. 

2001-ம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.   இதற்கிடையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 21-வது ஆண்டுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது. தஜிகிஸ்தான் நாட்டின் தலைநகர் துஷன்பேவில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மான் தலைமை தாங்கி நடத்துகிறார்.  இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் மற்றும் சில முக்கிய அதிகாரிகள் துஷன்பே சென்றுள்ளனர்.  

modi

மேலும், இந்த கூட்டத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர். இந்தியாவின் சார்பாக பிரதமர் நநேந்திர மோடி காணொளி காட்சி மூலம் பங்கேற்கிறார்.  இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக துஷன்பே சென்றுள்ள இந்திய வெளியவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங்க் யி-வை நேற்று சந்தித்து பேசினார்.  இந்த இரு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளின் மட்டத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.  குறிப்பாக, இந்திய-சீன எல்லையான லடாக் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள இருநாட்டு படைகளையும் விலக்கிக்கொள்வது மற்றும் அமைதியை நிலைநாட்டுவது போன்றவை குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.

modi

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ஆப்கானிஸ்தான் விவகாரம், பிராந்திய அமைதி குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் 2005-ம் ஆண்டு முதல் பார்வையாளராக இருந்து வந்த இந்தியா  பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நிரந்தர உறுப்பு நாடாகி விட்டது. அதே ஆண்டு பாகிஸ்தானும் நிரந்தர உறுப்பு நாடாகி விட்டது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News