எங்களுக்கு எதிராக வாக்களித்ததால் இந்தியாவுடனான உறவு முறியாது: நேதன்யாகு!

ஐ.நா.வில் இந்தியா ஒருமுறை எங்களுக்கு எதிராக வாக்களித்ததால் உறவு பாதிக்காது பெஞ்சமின் நேதன்யாகு 

Last Updated : Jan 15, 2018, 02:56 PM IST
எங்களுக்கு எதிராக வாக்களித்ததால் இந்தியாவுடனான உறவு முறியாது: நேதன்யாகு! title=

இந்தியா-இஸ்ரேல் நட்புறவானது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் போன்றது என உறுதிசெய்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ஜெருசலம் விவகாரத்தில் இந்தியா எங்களுக்கு எதிராக வாக்களித்தது ஏமாற்றம் அளித்தது என்றாலும், ஒருமுறை எதிர்மறையாக வாக்களித்தமையால் இந்தியா உடனான எங்களுடைய உறவில் எந்தஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தது என்றார். 

ஜெருசலமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அறிவித்துள்ளதை ஐ.நா. பாதுகாப்பு சபை நிராக்கரித்தது. இதுதொடர்பான வாக்கெடுப்பு பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற போது இந்தியா அமெரிக்காவின் அறிவிப்பிற்கு எதிராக வாக்களித்தது.

இந்தியா டுடே பத்திரிக்கைக்கு பேட்டியளித்து பேசிய பெஞ்சமின் நேதன்யாகுவிடம் இவ்விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பட்டது. அவர் பதிலளித்து பேசுகையில்,  “ஆம், நாங்கள் அதிருப்தி அடைந்தோம், இப்போதைய என்னுடைய இந்திய பயணம் இருநாடுகள் இடையிலான உறவு மேலும் முன்னோக்கி செல்கிறது என்பதற்கான சாட்சியாகும்,” என்றார். 

எங்களுக்கு எதிராக ஒரு முறை வாக்களித்ததால் உறவில் தாக்கம் ஏற்படும் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை, எனவும் குறிப்பிட்டார்.ஜெருசலமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்ததற்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் கொண்டுவந்த போது இந்தியா உள்பட 127 நாடுகள் எதிராக வாக்களித்தது.

 

 

 

Trending News