ஹைதரபாத்தை சேர்ந்த ஹூமா சாயிராவுக்கு, ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் வாட்சப் வழியே தலாக் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் 29 வயதுடைய ஹூமா சாயிரா என்பவர் ஓமன் நாட்டைச் சேர்ந்த 72 வயது நபருடன் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இந்நிலைய்ல், அவருக்கு உடல் நிலை சரியில்லாததால் ஹைதராபாத்துக்கு இரண்டு மாதத்துக்கு முன்பு வந்த சாயிரா, தாயுடன் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சாயிராவுக்கு அவரது கணவர் ஓமன் நாட்டில் இருந்து வாட்சப் மூலம் தலாக் அனுப்பியுள்ளார்.
He sent me to my mother's place in Hyderabad on 30 Jul'18 for medical treatment. When I came here, he gave me talaq on WhatsApp on 12 Aug'18 & after that, he is not answering any of my questions. I request EAM Sushma Swaraj ma'am to help me. (2/2) #Telangana pic.twitter.com/e36d0zXJV5
— ANI (@ANI) September 19, 2018
இந்த சம்பவத்தால் மனமுடைந்த அவர், தனக்கு உதவி செய்யுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.