அதிவிரைவு ரயில்களின் மூன்றாம் ஏசி பெட்டிகளில் பெண்களுக்காக 6 படுக்கைகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பினை மத்திய ரயில்வே துறை இன்று வெளியிட்டுள்ளது!
ரயில் பயணங்களின் பெண்களின் பயணங்களை மேலும் பாதுகாப்பானதாக மாற்ற இந்திய இரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது ராஜ்தானி, துரந்தோ மற்றும் முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இதர ரயில்களின் மூன்றாம் ஏசி பெட்டிகளில் கூடுதலாக 6 படுகைகளை ஒதுக்கியுள்ளது.
வயது வரம்பின்றி தனியாக அல்லது குழுவாகப் பயணம் செய்யும் பெண்கள் இதில் முன்பதிவு செய்யும்போது பயன்பெருவர் எனவும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்த வசதியானது ஏழைகளின் ரதம் என்றழைக்கப்படும் கரிப் ரத்தில் கிடைக்கப்பெறாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
.@RailMinIndia decides to earmark reserved accommodation in trains for female passengers.
A reservation quota of six berths in 3 AC class of all Rajdhani/Duronto/fully Air Conditioned trains (having 3 AC class) to be earmarked.
Read here: https://t.co/WyN99ijdb6 pic.twitter.com/HyMl07tK1g
— PIB India (@PIB_India) December 4, 2018
ஏற்கெனவே, இதேபோன்று பெண்களுக்காக பல ரயில்களின் முன்பதிவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து வகை மெயில் மற்றும் விரைவு வண்டிகளின் சாதாரண வகுப்புப் பெட்டிகளிலும் கூடுதலாக 6 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அனைத்து ரயில்களின் சாதாரண வகுப்பின் பொதுப்படுக்கை பெட்டிகளில் 6 மற்றும் ஏசி பெட்டிகளில் 3 என மூத்தகுடி, 45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதே வகையான ஒதுக்கீடு, ராஜ்தானி மற்றும் துரந்தோ ரயில்களின் அனைவருக்குமான பொதுப்பெட்டிகளிலும் 4 கீழ் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.