நாடு முழுவதும் இந்திய கடற்படை தினம் கோலாகலம்!

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 - ஆம் தேதி, இந்திய கடற்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

Last Updated : Dec 4, 2017, 11:46 AM IST
நாடு முழுவதும் இந்திய கடற்படை தினம் கோலாகலம்! title=

இந்தியாவில் நாடு முழுவதும் இந்திய கடற்படை தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே யுத்தம் நடைபெற்றது. அந்த யுத்தத்தில் இந்திய கடற்படை டிசம்பர் நான்காம் தேதி அன்று பாக்கித்தானின் கராச்சி துறைமுகம் மீது ஒரு அவசர கடல்வழி தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதல்களுக்கு ஆபரேஷன் திரிசூலம் என பெயரிடப்பட்டது.  

இந்த தாக்குதலில் பிஎன்எஸ் முஹபிஸ் மற்றும் பிஎன்எஸ் கைபர் கப்பல்களை இந்திய ஏவுகணைகள் தாக்கி மூழ்கடித்தன. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தாக்குதல்கள் ஆபரேஷன் மலைப்பாம்பு என்று அழைக்கப்பட்டன.

இந்த படையின் வெற்றியை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் நான்காம் தேதி இந்தியா கடற்படை தினமாக கொண்டாடுகிறோம்.

இந்திய கடற்படை தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு மும்பையில், கடற்படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. பேண்டு வாத்திய இசை முழங்க கடற்படை வீரர்கள் சீருடையுடன் அணிவகுத்தனர். இவ்விழாவைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கேட்வே ஆப் இந்தியா அருகே திரண்டனர். 

நாட்டின் கடல் எல்லைகளை காப்பதுதான் கடற்படையின் முதன்மையான நோக்கமாகும் இருப்பினும், இந்தியா தனது கடற்படையைப் பல விதங்களில் பயன்படுத்துகிறது. ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலமாக சர்வதேச உறவுகளை மேம்படுத்துதல், துறை முகங்களைப் பார்வையிடுதல், பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட பல மனிதாபிமானச் செயல்பாடுகள் ஆகியவற்றையும் இவை உள்ளடக்கியுள்ளன. 

நீல நிறக் கடற்படை என அடையாளப்படுத்திக் கொள்வதற்காக தனது சக்திகளை பெருக்கிக்கொள்ளும் நோக்கத்தோடு இந்தியக் கடற்படை மிகப் பெரிய அளவில் நவீனத்துவத்திற்கும் விரிவாக்கத்திற்கும் தன்னை உட்படுத்திக்கொண்டிருக்கிறது.

அதனால், டிசம்பர் 4ம் தேதி இந்திய கடற்படை தினம் கொண்டாடப்படுவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். 

 

Trending News