இந்த வருடம் இந்திய முஸ்லிம்கள், Haj பயணம் மேற்கொள்ள மாட்டார்கள்: Mukhtar Abbas Naqvi

இந்த வருடம் இந்திய முஸ்லிம்கள், Haj பயணம் மேற்கொள்ள மாட்டார்கள் என மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அறிவித்தார்.2020 ஆம் ஆண்டிற்கான, Haj பயணத்திற்காக, 2,13,000 மனுக்க வந்துள்ளதாகவும், இந்த மனுக்களுடன், மனுதாரர் செலுத்திய பணம் முழுவதுமாக, கழிவு ஏதும் இன்றி திருப்பி தரப்படும் என அவர் கூறினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 23, 2020, 06:24 PM IST
  • இந்த வருடம் இந்திய முஸ்லிம்கள், Haj பயணம் மேற்கொள்ள மாட்டார்கள் என மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அறிவித்தார்
  • கொரோனா வைரஸ், COVID-19 பெருந்தொற்று பரவி வரும் நிலையில், சர்வதேச ஹஜ் பயணிகளுக்கு சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது
  • Haj பயணத்திற்காக, 2,13,000 மனுக்கள் வந்திருந்தன
இந்த வருடம் இந்திய முஸ்லிம்கள், Haj பயணம் மேற்கொள்ள மாட்டார்கள்: Mukhtar Abbas Naqvi title=

இந்த வருடம் இந்திய முஸ்லிம்கள், Haj பயணம் மேற்கொள்ள மாட்டார்கள் என மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அறிவித்தார்.2020 ஆம் ஆண்டிற்கான, Haj பயணத்திற்காக, 2,13,000 மனுக்கள் வந்துள்ளதாகவும், இந்த மனுக்களுடன், மனுதாரர் செலுத்திய பணம் முழுவதுமாக, கழிவு ஏதும் இன்றி திருப்பி தரப்படும் என அவர் கூறினார்.

கொரோனா வைரஸ், COVID-19 பெருந்தொற்று பரவி வரும் நிலையில், சர்வதேச ஹஜ் பயணிகளுக்கு சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளதை அடுத்து, இந்த வருடம் ஹஜ் யாத்திரைக்காக இந்திய முஸ்லிகள் சவுதி அரேபியா செல்ல மாட்டார்கள் என மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.

ALSO READ | கிழக்கு லடாக்கில் இருந்து பின்வாங்க சீன இராணுவம் ஒப்புக் கொண்டதாக தகவல்!

அவர் இந்த தகவலை தனது தனது ட்விட்டரில் வெளியிட்டார். 2 லட்சத்தி 13 ஆயிரம் மனுக்கள் வந்திருப்பதாகவும், மனுதாரர் செலுத்திய பணத்தை கழிவு ஏதும் இன்றி முழுமையாக திருப்பி செலுத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இதில், 2020 ஆம் ஆண்டிற்கான Haj  பயணத்திற்கு, ஆண் உறவினர் துணை இல்லாமல் தனியாக செல்ல 2,300 பெண்கள் மனு அளித்திருந்தனர் என்றும்., இவர்கள், 2021 ஆம் ஆண்டிற்கு Haj பயணத்தில், இந்த ஆண்டில் அளிக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் அனுப்படுவார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சவுதி அமைச்சர் மொஹம்மத் சலாஹ் பின் டஹர் பெண்டன், நக்வி அவர்களுடன் நடத்திய தொலைபேசி உரையாடலில், கொரோன பெருந்தொற்று பரவி வரும் நிலையில், இந்தியாவிலிருந்து Haj யாத்ரீகர்களை அனுப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகவும், சவுதியின் முடிவை மதிக்கும் வகையிலும், மக்கள் நலனை கருத்தில் கொண்டும், இந்திய முஸ்லிம்கள் Haj பயணம் மேற்கொள்ள வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வருட Haj யாத்திரைக்காக அமைச்சகம் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தது. அமைச்சகம் Air India நிறுவனத்திற்கு 160 கோடி ரூபாய் செலுத்தியிருந்தது. Haj யாத்திரைக்காக, ஏர் இந்தியா, சவுதி அரேபியன் மற்றும்  இந்தியன் மற்றும் FlyNas ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன.

ALSO READ | #Dexamethasone மருந்தை யார் பயன்படுத்தலாம்?... WHO தலைவர் விளக்கம்

இந்தியாவும் சவுதி அரேபியாவும், 2019 டிசம்பர் 1 அன்று, இருதரப்பு Haj 2020 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Trending News