தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆணையம் ஆலோசனை...

தெலங்கானா சட்டப்பேரவை கலைக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று மதியம் ஆலோசனை...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 7, 2018, 09:01 AM IST
தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆணையம் ஆலோசனை... title=

தெலங்கானா சட்டப்பேரவையை கலைக்க சந்திரசேகர ராவ் அளித்த அமைச்சரவை பரிந்துரையை ஆளுநர் நரசிம்மன் ஏற்ற நிலையில் முன்கூட்டியே தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று மதியம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த ஆட்சி முடிய இன்னும் 9 மாதங்கள் இருக்கும் நிலையில், முன்கூட்டியே தெலுங்கானா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில், அம்மாநில ஆளுநரை சந்தித்து, தங்கள் அரசு சட்டசபை கலைத்துக் கொள்கிறது. அதற்க்கான கடிதத்தை நேற்று கொடுத்தார்.

தெலுங்கானா சட்டசபை கலைக்கப்பட்டது தொடர்பான அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது. இது தொடர்பாக இன்று மதியம் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்தாண்டு டிசம்பரில் மஹாராஷ்டிரா, சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு நடக்க உள்ள சட்டசபை தேர்தலுடன் தெலுங்கானா சட்டசபைக்கு சேர்த்து தேர்தல் நடத்துவதற்கான சாத்திய கூறுகளை தலைமை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து இன்று அறிவிப்பு வெளியிட உள்ளது. 

தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கையில், தெலுங்கானா மாநில வரைவு வாக்காளர் பட்டியல் இன்னும் சரிபார்க்கப்படவில்லை. எனவே சட்டசபை தேர்தல் ஜனவரியில் நடக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் கூறுகின்றன.

 

Trending News