இந்திய அரசு சார்பில் வழங்கப்படும் உயரிய ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினை இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலி பெற்றார்!
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் விளையாட்டில் சாதித்து நாட்டுக்கு பெருமை சேர்க்கும் இந்திய விளையாட்டு நட்சத்திரங்களுக்கு நாட்டின் உயரிய ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, துரோணாச்சாரியார், அர்சுனா, தயன் சந்த் மற்றும் ராஷ்டிரிய கே ப்ரோட்சாஹான் புரஸ்கர் ஆகிய 5 உயரிய விருதுகள் இந்தய அரசு சார்பில் வழங்கபட்டு வருகிறது.
Indian cricket captain @imVkohli receives #RajivGandhiKhelRatnaAward , 2018#NationalSportsAwards2018 @BCCI https://t.co/zlKHQS6iH0 pic.twitter.com/potdXZ3LfH
— PIB India (@PIB_India) September 25, 2018
இந்த விருதுகளில் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது உயரிய விருதாகும். இந்த விருதினை பெரும் வீரர்களுக்கு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.7.5 லட்சம் மதிப்பிலான பண முடிப்பு வழங்கப்படும். துரோணாச்சாரியார், அர்சுனா, தயன் சந்த் விருதினை பெறுவோர்கள் ரூ.5 லட்சம் மதிப்பிலான பண முடிப்பு வழங்கப்படும்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி, பளுதூக்கும் வீரங்கனை மீராபாய் சானு இருவருக்கும் இந்த ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசு விளையாட்டுத்துறை பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையின் பேரில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி-க்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது, இதனையடுத்து இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த அவர்கள் விருதினை வழங்க கோலி பெற்றுக்கொண்டார்.
இதற்கு முன்னதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி, சானிய மிர்சா, சாய்னா நேவால், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், தன்ராஜ் பிள்ளை, டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், அபினவ் பிந்த்ரா ஆகியோர் கேல் ரத்னா விருது பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.