புதுடெல்லி: பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி அளித்துள்ளது. லீபா பள்ளத்தாக்கில் (Leepa valley) பயங்கரவாதிகளின் ஏவுதளத்தை இந்திய ராணுவம் தகர்த்துள்ளது. குப்வாராவில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பயங்கரவாதிகள் ஊடுருவ செய்த பாகிஸ்தானின் முயற்சியை இந்திய ராணுவம் தோல்வி அடைய செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370வது பிரிவு நீக்கிய பின்னர், பாகிஸ்தான் (Pakistan) எல்லைகோடு அருகே போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பல குற்றங்களை செய்து வருகிறது.
அதுமட்டுமில்லாமல் ஜெய்ஷ்-இ-முகமது (Jaish A Mohammed) அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் கடல் வழியாக இந்தியாவைத் தாக்கும் திட்டதில் ஈடுபட்டு உள்ளதாக பிஎஸ்எஃப் வட்டாரங்கள் எச்சரித்துள்ளனர். அதற்காக 50 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் அடங்கிய குழுவுக்கு பாகிஸ்தானில் சிறப்பு "ஆழ்கடல் டைவிங்" பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக புலனாய்வு விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த பயங்கரவாதிகளைக் கொண்டு கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படை வீரர்களை தாக்குவதற்க்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றும் பி.எஸ்.எஃப் கூறியுள்ளது.
ஆதாரங்களின்படி, பி.எஸ்.எஃப் (BSF) இன் இந்த அறிக்கை தெற்கு கட்டளைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், எதிரிகளின் திட்டம் வெற்றி பெற அனுமதிக்கப்படாது என்று ஜெனரல் சைனி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
2008 ஆம் ஆண்டில் கூட பயங்கரவாதிகள் மும்பைக்குள் கடல் வழியாக நுழைந்து ஒரு பெரிய தாக்குதலை நடத்தி வெற்றி பெற்றார்கள் என்பதை இங்கே உங்களுக்குச் நினைவுக்கூற விரும்புகிறோம்.