இந்திய விமானப்படையின் 85-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வாகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
கடந்த 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப்படை உருவாக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசால் ராயல் இந்தியன் ஏர் போர்ஸ் என்று அழைக்கப்பட்டு வந்த விமானப்படை, சுதந்திரம் அடைந்ததற்கு பின்னர் இந்தியன் ஏர் போர்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், விமானப்படை உருவாக்கப்பட்டதன் 85-வது ஆண்டு விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்கள் சாகச பயிற்சியில் ஈடுபட்டனர்.
விமாப்படை உருவாக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி தங்களது வாழ்த்துக்களை டிவிட்டரில் தெரிவித்துள்ளனர்.