இந்தியா ஒரு அங்குல நிலத்தை கூட இழக்கவில்லை, இழக்காது: ராஜ்நாத் சிங்

மாநிலங்களவையில்  , கிழக்கு லடாக் பகுதியில் நிலவும் எல்லை பிரச்சினை தொடர்பாக விளக்கம் அளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh), கிழக்கு லடாக்கில் உள்ள பேங்காங் திசோ பகுதியில் படைகளை விலக்கிக் கொள்ள இந்தியாவும், சீனாவும் இணங்கியுள்ளதாக தெரிவித்தார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 11, 2021, 04:54 PM IST
  • இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பிரச்சனைகள், பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே தீர்வு காணப்படும்.
  • எல்லைப்பகுதியில் அமைதியான சூழல் நிலவ வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.
  • கடந்த ஆண்டில், லடாக் பகுதியில் சீன அத்துமீற முயன்றபோது சீனாவுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தது.
இந்தியா ஒரு அங்குல நிலத்தை கூட இழக்கவில்லை, இழக்காது: ராஜ்நாத் சிங் title=

ஒரு அங்குலம் நிலத்தை கூட சீனாவிடம் இந்தியா விட்டுக் கொடுக்காது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலங்கள​வையில், திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில்  , கிழக்கு லடாக் பகுதியில் நிலவும் எல்லை பிரச்சினை தொடர்பாக விளக்கம் அளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh), கிழக்கு லடாக்கில் உள்ள பேங்காங் திசோ பகுதியில் படைகளை விலக்கிக் கொள்ள இந்தியாவும், சீனாவும் இணங்கியுள்ளதாக தெரிவித்தார். 

எல்லைப்பகுதியில் அமைதியான சூழல் நிலவ வேண்டும் என்பதில் இந்தியா (India) உறுதியாக உள்ளதாக கூறிய அவர், தேசப் பாதுகாப்பு என்று வரும் போது இந்தியா ஒன்று பட்டு நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பிரச்சனைகள், பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே தீர்வு காணப்படும் என சீனாவிடம் இந்தியா உறுதி அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

கடந்த ஆண்ட்டில், லடாக் (Ladakh) பகுதியில் சீன அத்துமீற முயன்றபோது சீனாவுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்ததாக குறிப்பிட்ட மத்திய அமைச்சர்,  இந்திய எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள பதற்றம் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என சீனாவிடம் தெளிவுபட தெரிவித்ததாக ராஜ்நாத் சிங் கூறினார். 

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை இரு நாடுகளும் மதித்து மீண்டும் முந்தைய நிலையே தொடர வேண்டும் என வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார். 

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான 9 வது சுற்று பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட ஒருமித்த கருத்துப்படி புதன்கிழமை திட்டமிட்டபடி சீன மற்றும் இந்திய எல்லையில் உள்ள படைகள் பின்வாங்கத் தொடங்கின.

ராணுவத் தளபதி நிலையிலான ஒன்பதாவது சுற்று பேச்சுவார்த்தையின் போது ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. அதையடுத்து, பாங்காங் ஏரியின் (Pangong Lake) தெற்கு மற்றும் வடக்கு கரையில் உள்ள சீன மற்றும் இந்திய எல்லைப் படைகள் புதன்கிழமையன்று அங்கிருந்து வெளியேறத் தொடங்கியதாக சீன தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ALSO READ | Border Tension: பாங்காங் ஏரி பகுதியில் இருந்து துருப்புக்கள் வெளியேறுகின்றன

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News