சீனாவின் ‘மெகா சர்வதேச மாநாடு’ பங்கேற்க இந்தியா மறுப்பு

Last Updated : May 14, 2017, 12:24 PM IST
சீனாவின் ‘மெகா சர்வதேச மாநாடு’ பங்கேற்க இந்தியா மறுப்பு title=

சீனாவில் நடைபெறும் மெகா சர்வதேச மாநாட்டில் பங்கேற்க இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. 

ஓபிஓஆர்(OneBeltOneRoad) என்ற பெயரில், சர்வதேச நாடுகளுக்கான அரசியல் மாநாட்டை சீனா தொடங்கி, நடத்தி வருகிறது. இதன்மூலமாக, அனைத்து சாலைகளும் சீனாவை நோக்கி என்ற நோக்கத்தில், உலக ஆசிய, ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்க நாடுகளை ஒருங்கிணைத்துப் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள அந்நாடு திட்டமிட்டுள்ளது.

இதன் அடுத்தக்கட்ட வளர்ச்சிப் பணிகள் பற்றி ஆலோசிக்கும் வகையிலேயே, தற்போதைய சர்வதேச நாடுகள் மாநாட்டுக்கு சீனா ஏற்பாடு செய்துள்ளது. ஆனால், இந்தியா இதில் பங்கேற்க மறுப்பு தெரிவித்துவிட்டது.

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் வழியாகச் செல்லும் சீனா-பாகிஸ்தான் சாலைப் பணிகளுக்கு அந்நாடு நிதி உதவி வழங்கியுள்ளது. அத்துடன், புதிய பொருளாதார திட்டங்களுக்கும் முதலீடு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்தியா தற்போது சீனாவின் சர்வதேச மாநாட்டை புறக்கணித்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

Trending News