நாட்டை உலுக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கி ₹13,5000 கோடி ஊழல் (PNB Scam) வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, தப்பியோடிய வைர வர்த்தகர் மெஹுல் சோக்ஸி (Mehul Choksi) குறித்து முக்கிய செய்தி வெளிவந்துள்ளது.
இந்தியாவில் இருந்து தப்பியோடிய வசிர வியாபாரி மெஹுல் சோக்ஸியை நாடு கடத்துவது தொடர்பான ஆவணங்களுடன் டொமினிகாவிற்கு இந்தியா ஒரு தனியார் ஜெட் அனுப்பியுள்ளதாக ஆன்டிகுவா மற்றும் பார்புடாவின் பிரதம மந்திரி காஸ்டன் பிரவுன் (Gaston Browne) தனது நாட்டில் ஒரு வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.
தற்போது டொமினிகாவில் உள்ள டக்ளஸ்-சார்லஸ் விமான நிலையத்தில் கத்தார் ஏர்வேஸ் தனியார் ஜெட் விமானம் தரையிறங்கியுள்ளது என்பதை பிரவுன் உறுதிப்படுத்தினார்.
மெஹுல் சோக்ஸி தப்பியோடியவர் என்பதை நிரூபிக்கும் ஆவணங்களை இந்திய அரசு நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ளதாகவும், இவை புதன்கிழமை (ஜூன் 2) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் என்றும் பிரவுன் கூறினார். சோக்ஸியை நாடு கடத்த இந்திய அரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து வருகிறது என்று ஆன்டிகுவா பிரதமர் மேலும் தெரிவித்தார்.
ALSO READ | மெகுல் சோக்ஸி சிறையில் இருக்கும் படங்கள் வெளியானது; அவரது ‘காயங்கள்’ கூறுவது என்ன
டொமினிகாவின் சிறையில் உள்ள வைர வர்த்தகர் மெஹுல் சோக்ஸியின் சில படங்கள் ஊடகங்களில் இன்று காலை வெளிவந்தன. அதில், அவரது உடலில் காயங்கள் காணப்படுகின்றன. மெகுல் சோக்ஸி தாக்கப்பட்டதாக சோக்ஸியின் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
ஊடகங்களில் வெளிவந்த படங்களில், அவர் சிறை கம்பிகளுக்குப் பின்னால் இருக்கிறார். அதில் அவரது கையில் காயத்தையும் காணலாம். அவரது இடது கண்ணும் சிவந்து காணப்படுகிறது. இந்த படங்கள் டொமினிகா சிறையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நாட்டை உலுக்கிய ₹13,500 கோடி பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மோசடியில், முக்கிய குற்றவாளியான மெகுல் சோக்ஸி (Mehul Choksi), இந்தியாவிலிருந்து தப்பியோடி, ஆன்டிகுவா தீவில் வாழ்ந்து வருகிறார். 2018ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் கரிபியன் தீவுக்கு மெகுல் சோக்ஸி தனது குடும்பத்தினருடன் தப்பி சென்றார். இவர் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான நிரவ் மோடியின் நெருங்கிய உறவினரும் ஆவார்.
ALSO READ | PNB வங்கி மோசடி: ஆன்டிகுவாவில் இருந்த மெகுல் சோக்ஸியை காணவில்லை
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR