இந்தியா உலகின் 3வது பெரிய மருந்து உற்பத்தியாளராக உள்ளது: பிரதமர் மோடி

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் நடைபெற்று வரும்  நிலையில், பிரதமர் நரேந்திர மோடி   'உலக நிலை'  குறித்த சிறப்புரை ஆற்றினார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 18, 2022, 08:06 AM IST
  • நாடு உலகின் "மிகவும் கவர்ச்சிகரமான" முதலீட்டு இடமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் இந்தியா 60,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்களை பதிவு செய்துள்ளது.
  • இந்தியா உலகின் மூன்றாவது பெரிய மருந்து உற்பத்தியாளராக உள்ளது.
இந்தியா உலகின் 3வது பெரிய மருந்து உற்பத்தியாளராக உள்ளது: பிரதமர் மோடி title=

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் நடைபெற்று வரும்  நிலையில், பிரதமர் நரேந்திர மோடி   'உலக நிலை'  குறித்த சிறப்புரை ஆற்றினார். 

தொற்றுநோய்களின் போது மற்ற நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் இந்தியா உயிரைக் காப்பாற்றுகிறது என்று பிரதமர் மோடி கூறினார். "இன்று, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய மருந்து உற்பத்தியாளராக உள்ளது," என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.

புது தில்லி: உலகப் பொருளாதார மன்றத்தின் டாவோஸ் நிகழ்ச்சி நிரலில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை உரையாற்றினார். பிரதமர் மோடி தனது உரையின் போது, ​​​​நாடு உலகின் "மிகவும் கவர்ச்சிகரமான" முதலீட்டு இடமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று கூறினார். “இந்திய இளைஞர்கள் உங்கள் வணிகங்களையும் யோசனைகளையும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல தயாராக உள்ளனர். எங்களின் உலகளாவிய திறன்களால், 2021 ஆம் ஆண்டில் இந்தியா 60,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்களை பதிவு செய்துள்ளது, ”என்று அவர் உலக பொருளாதார மன்றத்தின் (WEF) ஐந்து நாள் ஆன்லைன் ‘டாவோஸ் அஜெண்டா’ உச்சிமாநாட்டில் பேசும்போது கூறினார்.

தொற்றுநோய்களின் போது மற்ற நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் இந்தியா உயிர்களை காப்பாற்றுகிறது என்று  குறிப்பிட்ட பிரதமர் மோடி (PM Narendra Modi)  "இன்று, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய மருந்து உற்பத்தியாளராக உள்ளது," என்றும் கூறினார்.

உலகப் பொருளாதார மன்றத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:

இந்தியா போன்ற வலுவான ஜனநாயகம் முழு உலகிற்கும் ஒரு அழகான பரிசை, நம்பிக்கை என்னும் பூச்செண்டை வழங்கியுள்ளது. இந்த பூச்செண்டில், ஜனநாயகத்தின் மீது இந்தியர்களாகிய நமக்கு உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பார்க்கலாம். இந்த பூங்கொத்தில் 21 ஆம் நூற்றாண்டை மேம்படுத்தும் தொழில்நுட்பம் உள்ளது. இந்த பூங்கொத்தில், இந்தியர்களாகிய  எங்களின் திறமை உள்ளது என்றார் பிரதமர் மோடி.

ALSO READ | தடுப்பூசி இயக்கத்தில் பங்காற்றிய அனைவரையும் வணங்குகிறேன்: பிரதமர் மோடி

கொரோனாவின் இந்த நேரத்தில், இந்தியா, ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்’ என்ற தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி, பல நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவதைப் பார்த்தோம். இன்று, உலகின் மூன்றாவது பெரிய மருந்து உற்பத்தியாளராக உள்ள இந்தியா, உலகிற்கு ஒரு மருந்தகம் என்றார் பிரதமர் மோடி

இன்று, இந்தியா சாதனை அளவிலான மென்பொருள் பொறியாளர்களை உலகிற்கு அனுப்புகிறது. இந்தியாவில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மென்பொருள் உருவாக்குநர்கள் பணிபுரிகின்றனர். இன்று, உலகில் அதிக எண்ணிக்கையிலான யூனிகார்ன்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த 6 மாதங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார் பிரதமர் மோடி

இன்று, இந்தியா எளிதான வணிகத்தை ஊக்குவிக்கிறது, அரசாங்கத்தின் தலையீட்டைக் குறைக்கிறது. அதன் கார்ப்பரேட் வரி விகிதங்களை எளிமையாக்கி, குறைப்பதன் மூலம், இந்தியா உலகின் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த நாடாக மாற்றியுள்ளது என்றார் பிரதமர் மோடி

இந்தியர்களின் புத்தாக்கத் திறன், புதிய தொழில்நுட்பத்தைப் பின்பற்றும் திறன், தொழில் முனைவோரின் ஆர்வம் மற்றும் புதுமை ஆகியவை நமது உலகளாவிய கூட்டாளி நாடுகளுக்கு புதிய ஆற்றலை அளிக்கும். எனவே இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த நேரம்: பிரதமர் மோடி

தன்னம்பிக்கையின் பாதையில் நடைபோடும்போது, ​​இந்தியா  செயல்முறைகளை எளிமையாக்குவதில் மட்டுமல்ல, முதலீடு மற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்துகிறது. இந்த அணுகுமுறையுடன், 26 பில்லியன் டாலர் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டங்கள் இன்று 14 துறைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய இளைஞர்களின் தொழில்முனைவு இன்று புதிய உச்சத்தில் உள்ளது. 2014 இல் இந்தியாவில் சில நூறு பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப்கள் இருந்தன. இன்று அவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இது 80 க்கும் மேற்பட்ட யூனிகார்ன்களைக் கொண்டுள்ளது, அவற்றில் 40 க்கும் மேற்பட்டவை 2021 ஆம் ஆண்டு உருவானவை

இன்று, இந்தியா அடுத்த 25 ஆண்டுகளுக்கு இலக்கை நோக்கி கொள்கை முடிவுகளை எடுக்கிறது. இந்த சகாப்தத்தில், இந்தியா அதிக வளர்ச்சி, நலன் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான இலக்குகளை நிர்ணயித்துள்ளது. இந்த வளர்ச்சியின் காலம் பசுமையாகவும், சுத்தமாகவும், நிலையானதாகவும், நம்பகமானதாகவும் இருக்கும் என்றார் பிரதமர் மோடி

நமது வாழ்க்கை முறையும் காலநிலைக்கு ஒரு பெரிய சவால் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். ‘ ஒரு முறை பயன்படுத்து தூக்கி எறியும்’ பொருட்களை பயன்படுத்தும் பழக்கம் காலநிலை சவாலை இன்னும் தீவிரமாக்கிவிட்டன. இந்த நிலை மாறும் வகையில் மறு சுழற்சி அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கி வேகமாக நகர வேண்டும் என்றார் பிரதமர் மோடி

இன்று, உலகமே ஒரு குடும்பமாக உள்ள நிலையில், நாம் எதிர்கொள்ளும் சவால்களும் அதிகரித்து வருகின்றன. இவற்றை எதிர்த்துப் போராட ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு உலகளாவிய நிறுவனத்திற்கும் கூட்டு மற்றும் ஒத்திசைவான நடவடிக்கை தேவை என்றார் பிரதமர் மோடி

ALSO READ | COVID-19 தொற்றுக்கு ஒமிக்ரான் முடிவுரை எழுதுமா; UK பேராசிரியர் கூறுவது என்ன...!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News