தப்பியோடிய தொழிலதிபர்கள் மெஹுல் சோக்ஸி மற்றும் நிரவ் மோடி ஆகியோருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக இந்தியா வெள்ளிக்கிழமை (ஜூலை 2, 2021) தெரிவித்துள்ளது.
இது குறித்த கருத்து வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி, "இரு வழக்குகளிலும் நடந்து வரும் சட்ட நடவடிக்கைகளை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்" என்றார்.
மெஹுல் சோக்ஸியைக் (Mehul Choksi) கடத்தியதாகக் கூறப்படுவதில் டொமினிகா அரசாங்கத்தின் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டதாகக் கூறப்படும் செய்திகளுக்கு மத்தியில் இந்த அறிக்கை வந்துள்ளது.
மெகுல் சோக்ஸி, நீரவ் மோடியை, விசாரணைக்காக நாடு திருப்பி அழைத்து வர தொடர்ந்து மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சோக்ஸி தற்போது டொமினிகாவில் (Dominica) விசாரணையை எதிர்கொண்டுள்ளார், இந்தியாவை உலுக்கிய ₹13,500 கோடி ரூபாய் பஞ்சாப் நேஷனல் வங்கி வழக்கில் தப்பியோடிய தொழிலதிபர் மெகுல் சோக்ஸி, 2018 முதல் ஆன்டிகுவாவில் வசித்து வரும் நிலையில், மே 23 அன்று ஆன்டிகுவாவிலிருந்து காணாமல் போயிருந்தார். பின்னர் அவர் டொமினிகாவில் சிக்கினார். மேலும் கரீபியன் தீவு நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக பொலிஸாரால் குற்றம் சாட்டப்பட்டார்.
ALSO READ | விஜய் மல்லையா, நீரவ் மோடியின் ₹9,371 கோடி சொத்துக்கள் வங்கிகளிடம் ஒப்படைப்பு: ED
மறுபுறம், நீரவ் மோடி தற்போது தெற்கு லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், அங்கு அவர் இந்தியாவில் நடந்த மிகப்பெரிய வங்கி மோசடி தொடர்பாக 2019 மார்ச் மாதம் லண்டனில் கைது செய்யப்பட்டதிலிருந்து சிறையில் உள்ளார்.
இதற்கிடையில், நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி மற்றும் விஜய் மல்லையா தொடர்பான வழக்குகளில் 9,371.17 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பொதுத்துறை வங்கிகள் மற்றும் மத்திய அரசுக்கு அமலாக்க துறை (ED) புதன்கிழமை மாற்றியது.
இந்த வழக்கு தொடர்பாக ED இதுவரை ரூ .18,170.02 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது.
ALSO READ | மெகுல் சோக்ஸி இந்தியாவிற்கு கொண்டு வரப்படுவது எப்போது; அரசு கூறுவது என்ன
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR