மெகுல் சோக்ஸி சிறையில் இருக்கும் படங்கள் வெளியானது; அவரது ‘காயங்கள்’ கூறுவது என்ன

மெகுல் சோக்ஸி மே 23 மாலை ஆன்டிகுவாவில் இள்ள வீட்டிலிருந்து திடீரென காணாமல் போனார்.  பின்னர் மே 26 அன்று டொமினிகாவில்  கண்டுபிடிக்கப்பட்டு கைதானானார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 30, 2021, 10:53 AM IST
  • மெஹுல் சோக்ஸியின் சிறைச்சாலை படங்கள் வெளிவந்தன
  • கண் மற்றும் கையில் காயங்கள்
  • ஆன்டிகுவாவில் உள்ள தனது வீட்டிலிருந்து மெகுல் சோக்ஸி காணாமல் போனார்.
மெகுல் சோக்ஸி சிறையில் இருக்கும் படங்கள் வெளியானது; அவரது ‘காயங்கள்’ கூறுவது என்ன title=

புதுடெல்லி: நாட்டை உலுக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கி ₹13,5000 கோடி ஊழல் (PNB Scam) வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, தப்பியோடிய வைர வர்த்தகர் மெஹுல் சோக்ஸி (Mehul Choksi) குறித்து பெரிய செய்தி வெளிவந்துள்ளது. உண்மையில், டொமினிகாவின் சிறையில் உள்ள வைர வர்த்தகர் மெஹுல் சோக்ஸியின் சில படங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.அதில், அவரது உடலில் காயங்கள் காணப்படுகின்றன. மெகுல் சோக்ஸி தாக்கப்பட்டதாக சோக்ஸியின் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும்,வெளிவந்த படங்களில், அவர் சிறை கம்பிகளுக்குப் பின்னால் இருக்கிறார். அதில் அவரது கையில் காயத்தை காணலாம். அவரது இடது கண்ணும் சிவந்து காணப்படுகிறது. அவரது கை மற்றும் மணிக்கட்டில் காயங்கள் இருக்கின்றன. படங்கள் டொமினிகா சிறையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சோக்ஸியின் வழக்கறிஞர், 'மெஹுல் சோக்ஸி ஆன்டிகுவாவிலிருந்து வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டார். அவருக்கு சட்ட உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. மேலும், மெஹுல் சோக்சியின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் தனது வாடிக்கையாளரை 'துன்புறுத்தியதாக' குற்றம் சாட்டினார். அவர் டொமினிகா எவ்வாறு சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

ஒரு வாரத்திற்கு முன்பு ஆன்டிகுவாவிலிருந்து காணாமல் போன மெகுல் சோக்ஸி

மே 23 மாலை ஆன்டிகுவாவில் உள்ள வீட்டிலிருந்து சோக்ஸி (Mehul Choksi) திடீரென காணாமல் போனார். பின்னர் மே 26 அன்று அவர் டொமினிகாவில் சிக்கினார். அவர் அங்கிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படுவது குறித்து தொடர்ந்து விவாதம் நடைபெற்றது, ஆனால் டொமினிகா அரசாங்கம் அவரை ஆன்டிகுவாவிடம் ஒப்படைப்பதாக தெளிவுபடுத்தியது.

இந்திய நிறுவனங்களின் முயற்சிகள் தொடர்கின்றன

2018 ஜனவரியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 ஆயிரம் கோடி மோசடி நடந்ததது அம்பலமாகியது. இந்த வழக்கில், சிபிஐ 2018, ஜனவரி, 30ம் தேதி அன்று எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. ஆனால் அதற்கு முன்னர், இந்த வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி ஆகியோர் இந்தியாவை விட்டு தப்பி ஓடி விட்டனர். இருவரையும் விசாரணைக்காக இந்தியாவிற்கு நாடு திருப்பி அழைத்து வர சிபிஐ உள்ளிட்ட இந்திய ஏஜென்சிகள் இரவும் பகலும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

ALSO READ | PNB வங்கி மோசடி: ஆன்டிகுவாவில் இருந்த மெகுல் சோக்ஸியை காணவில்லை

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News