ஊரடங்கில் காய்கறி கடை விரித்த மூதாட்டி… மொத்தமும் வாங்கி கருணை காட்டிய அதிகாரி…!!!

ஊரடங்கை அமல் படுத்துகையில் சத்திஸ்கரின் துர்க் மாவட்ட ஆட்சியரின் கணிவான செயல் அனைவர் மனதையும் நெகிழ வைத்துள்ளது

Last Updated : Jul 29, 2020, 11:21 AM IST
  • பொது முடக்கம் காரணமாக, படித்த நல்ல வேலையில் இருந்தவர்கள் கூட காய்கறி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்
  • பொது முடக்க விதிகளை கடுமையாக கடைபிடிக்கும் அதிகாரிகள் சிலர், அதை அமல் படுத்தும் போது, சம்பந்தபட்ட நபரின் நிலையை கருத்தில் கொண்டு கருணை உள்ளதோடு தீர்வு காண்கின்றனர்
  • அரசு அதிகாரியின் இந்த செயலை அனைவரும் பாராட்டினர்
ஊரடங்கில் காய்கறி கடை விரித்த மூதாட்டி… மொத்தமும் வாங்கி கருணை காட்டிய அதிகாரி…!!! title=

கொரோனா ஊரடங்கால், அனைத்து பிரிவினரும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் நேரிடையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர், அதனால் ஏற்பட்ட வியாபார சரிவு, பொருளாதார சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொது முடக்கம் காரணமாக, படித்த  நல்ல வேலையில் இருந்தவர்கள் கூட காய்கறி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டதை பார்த்தோம்.

இந்நிலையில் ஆறுதலாக அளிக்கும் விஷயம் என்னவென்றால், பொது முடக்க விதிகளை கடுமையாக கடைபிடிக்கும் அதிகாரிகள், அதை அமல் படுத்தும் போது, சம்பந்தபட்ட நபரின் நிலையை கருத்தில் கொண்டு  கருணை உள்ளதோடு தீர்வுகளையும் காண்கின்றனர் என்பது தான்.

ALSO READ | வயதான பெற்றோருக்கு மருத்துவ காப்பீடு… கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன..!!!!

இது போன்ற நல்ல உள்ளங்களால் தான் உலகம் இன்னும் அழியாமல் இருக்கிறது என்றால் மிகை இல்லை.

இந்த வகையில், சத்திஸ்கரின் துர்க் மாவட்ட ஆட்சியரின் கணிவான செயல் அனைவர் மனதையும் நெகிழ வைத்துள்ளது.

லாக்டவுன் அமலில் இருக்கும் போது, காய் வியாபரம் செய்யும் ஒரு வயாதான பெண் ஒருவர், வீதியில் காய்கறி கடை வைத்திருந்தார்.

அன்றாடம் வரும் வருமானத்தை வைத்து, வாழ்வாதாரத்தை நடத்தி வரும் அந்த பெண்மணியிடம், லாக்டடவுன் அமலில் இருப்பதன் காரணமாக, கடையை அகற்ற வேண்டும் என அதிகாரி முன்னதாக கேட்டுக் கொண்ட போது அவர் மறுத்தார்.

கொரோனா கால பொது முடக்கம் காரணமாக ஏழ்மை நிலையில் இருப்பவரின் அவல நிலையை உணர்ந்து கொண்ட அந்த அதிகாரி, அவரது கடையை அப்புறப்படுத்த, கையாண்ட விதம் அனைவரையும் நெகிழ வைத்தது.

ALSO READ | கூரான கத்தியை விழுங்கிய நபர்… சவாலான அறுவை சிகிச்சை செய்த AIIMS மருத்துவர்கள்

அவர் அந்த காய்கறி விற்கும் பெண்மணியிடம், அவரிடம் இருந்த காய்கறி அனைத்தையும்  வாங்கினார். இதனால் அவர் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என கூறுவதை போல, ஊரடங்கு விதிகளை கடுமையாக அமல்படுத்தும் அதே நேரத்தில், அரசு அதிகாரி கருணையுடன் நடந்து கொண்ட செயல் அனைவரையும் ஆச்சர்ய படுத்தியது.

சம்பவத்தின் போது சுற்றி இருந்த காவல் துறையினர், அதிகாரியின் நடவடிக்கையை பாராட்டினர்.

Trending News