அடுத்த 4 நாட்கள் கேரளா முதல் காஷ்மீர் வரை மழை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

Rain Alert In South India: அடுத்த 5 நாட்களுக்கு தென் இந்தியாவில் குறிப்பாக கேரளா மற்றும் லட்சத்தீவுகளில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும். அதேபோல தென் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : May 30, 2023, 09:30 PM IST
  • காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.
  • சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
  • மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அடுத்த 4 நாட்கள் கேரளா முதல் காஷ்மீர் வரை மழை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு title=

IMD Alert In Northwest India: அடுத்த நான்கு நாட்களுக்கு வடமேற்கு இந்தியாவில் வானிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழை மற்றும் இடியுடன் கூடிய மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வியாழன் வரை வடமேற்கு இந்தியாவில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும். மேலும், இடி, மின்னலுடன் சில சமயங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்யும் என எதிர் பார்க்கப்படுகிறது எனக் கூறியுள்ளது. ராஜஸ்தானில் ஆலங்கட்டி மழை பெய்யும் என்று வானிலை முன்னறிவிப்பு நிறுவனம் கணித்துள்ளது. இது தவிர, இமாச்சலப் பிரதேசத்தில் ஜூன் 1 வரையும், உத்தரகாண்ட் ஜூன் 2 வரையும் ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும். அதேபோல  அடுத்த 5 நாட்களுக்கு கேரளா மற்றும் லட்சத்தீவுகளில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்னிந்தியாவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என கணிப்பு:
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புப்படி, அடுத்த 5 நாட்களுக்கு கேரளா மற்றும் லட்சத்தீவுகளில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். இதற்கிடையில், தென்மேற்கு பருவமழை தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்காள விரிகுடா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடலின் சில பகுதிகளுக்கு முன்னேறியுள்ளது.

மேலும் படிக்க - வானிலை ஆய்வு மையத்தின் அலெர்ட்! அதி தீவிர புயல் மோச்சாவின் கோரத் தாண்டவம்

தமிழ்நாட்டில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்:
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். தமிழகத்தில்  ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

ராஜஸ்தானில் கனமழை பெய்யக்கூடும்:
ராஜஸ்தானைப் பொறுத்தவரை, இன்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உதய்பூரில் மாலையில் வானிலை திடீரென மாறியது. கருமேகங்களும் பலத்த காற்றும் இங்கு காணப்பட்டன. வெப்பம் குறைந்துள்ளதால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. ஜோத்பூர், உதய்பூர், கோட்டா, அஜ்மீர் மற்றும் பிகானேர் ஆகிய மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமையும் இடியுடன் கூடிய கனமழை, பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியஸ் முதல் 30.2 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. 24 மணி நேரத்தில் ஜோத்பூர், உதய்பூர், கோட்டா, அஜ்மீர் கோட்டங்களின் சில பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய மழை பதிவாகியுள்ளது. ஜெய்சால்மரில் அதிகபட்சமாக 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க - வானிலை: இடி மின்னலுடன் நாளை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

ஜம்மு-காஷ்மீரில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்:
ஜம்மு-காஷ்மீரில் ஜூன் 2-ஆம் தேதி வரை இடி மற்றும் மின்னலுடன் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை ஆய்வு மையத்தின்படி, மே 31 முதல் ஜூன் 2 வரை சில இடங்களில் ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இன்று பெரும்பாலான இடங்களில் மேகமூட்டத்துடன் காணப்படும். பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஜம்மு காஷ்மீரில் பல்வேறு இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வீட்டைவிட்டு வெளியே செல்பவர்களுக்கு அறிவுரை:
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பயணத்தைத் தொடரும் முன், சம்பந்தப்பட்ட அனைவரும் விழிப்புடன் இருக்கவும், போக்குவரத்து அறிவுரைகளைப் பின்பற்றவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று மற்றும் நாளை இலட்சதீவு பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென் தமிழக கடலோரப்பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க - தேனியில் பெய்த கனமழையால் கீழே சாய்ந்த வாழை மரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News