IIT Kharagpur ஆராய்ச்சியாளர்கள் COVID-19 நோய்த்தொற்றைக் கண்டறிய ஒரு புதிய, சிறிய, விரைவாக கண்டறியும் (Rapid Test) சாதனத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த வகையில் முதன்முதலில் உருவாகியுள்ள இந்த கருவி, விலை உயர்ந்த ஆய்வகங்கள் மற்றும் RT-PCR இயந்திரங்களுக்குள் அடைந்திருந்த COVID-19 பரிசோதனையை, உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு மலிவு விலையில் வசதிகள் கிடைக்கும் படி ஏதுவாக்கியுள்ளது.
இந்த பரிசோதனைக்கு மொத்தம் 400 ரூபாய்தான் செலவாகும். சிறப்பு ஆய்வக உபகரணங்களுக்கு மாற்றாக மிகக் குறைந்த விலையில் சிறிய கையடக்க கூடங்களில் இதைச் செய்யலாம். இந்த போர்டபிள் யூனிட்டுகள் அதிக பரிசோதனைகளுக்கு பயன்படுத்தப்படலாம். RT-PCR சொதனைகளுக்கு ஏற்ப இந்த பரிசோதனைகளில் துல்லியமான முடிவுகள் கிடைக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என சிலர் கருதுகிறார்கள். மேலும் பலருக்கு தொற்றிற்கான அறிகுறிகளும் தென்படுவதில்லை. இப்படிப்பட்ட நிலையில் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள் நடப்பது இன்றியமையததாகி விடுகிறது.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த பேராசிரியர் சுமன் சக்ரவர்த்தியும், ஐ.ஐ.டி கரக்பூரின் பயோ சயின்ஸ் பள்ளியைச் சேர்ந்த டாக்டர் அரிந்தம் மொண்டலும், Covid-19 க்கான ஒரு “Portable non-invasive rapid detection test” என்ற கருத்தின் அடிப்படையில் ஆய்வுகளைத் துவக்கினர்.
IIT Kharagpur ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய கருவிக்கு பைலட் ஃபெசிலிடியாக பயன்படுத்தப்பட்டால் சுமார் 2,000 ரூபாய் செலவாகும். உற்பத்தி அளவிலான தேவை அதிகரிப்பு இதன் விலையை வெகுவாகக் குறைக்கக்கூடும். இதன் சாத்தியக்கூறுகளை எல்லாம் ஆராய்ந்துதான் இந்த பரொசோதனை 400 ரூபாய்க்கு செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுள்ளது.
ALSO READ: கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 9 மாநிலங்கள், மத்திய அரசு Special அறிவுறுத்தல்
இந்த கருவி வணிகமயமாக்கப்பட தயாராக உள்ளது என்றும், எந்தவொரு கார்ப்பரேட் அல்லது ஸ்டார்ட்-அப் நிறுவனமும் தொழில்நுட்ப உரிமம் மற்றும் வணிக அளவிலான உற்பத்திக்காக IIT Kharagpur-ஐ அணுகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தொற்றுநோய்களுக்கு மத்தியில் பொது சுகாதாரத்தின் நலனைப் பாதுகாப்பதற்கான கொள்கை நடவடிக்கையாக, நலிந்த சமூகத்திற்கான குறைந்த கட்டண சுகாதார நோக்கத்தை பூர்த்தி செய்வது தொடர்பாக அரசாங்கம் இதில் தலையிடும் பட்சத்தில், அந்த செயல்முறையில் இணைந்து பங்களிக்கவும் நிறுவனம் தயாராக உள்ளது.
ALSO READ: COVID-19 தொற்றை அறிகுறிக்கு முன்பே கண்டறியும் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்!