வீடியோகான் முறைகேடு: ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சார் மீது FIR

இன்று ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சார் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 24, 2019, 05:11 PM IST
வீடியோகான் முறைகேடு: ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சார் மீது FIR title=

வீடியோகான் குழுமத்துக்கு ரூ.3,250 கோடி கடன் கொடுத்த விவகாரத்தில் ICICI வங்கியின் தமைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான சந்தா கொச்சாரின் கணவர் தீபக் கொச்சார் மற்றும் வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது CBI வழக்கு பதிவு செய்துள்ளது.

முன்னதாக கடந்த 2012-ம் ஆண்டு 20 வங்கிகளின் கூட்டமைப்பு இணைந்து வீடியோகான் குழுமத்திற்கு ரூ.40,000 கோடி கடன் வழங்கிருந்ததாகவும், இதில் ஒரு வங்கியான ICICI வீடியோகான் குழுமத்திற்கு ரூ.3,250 கோடியை அளித்ததகாவும் தெரிவிக்கப்பட்டது. ICICI வங்கியிடம் இருந்து கடன் பெற்ற 6 மாதத்துக்குப் பின்னர் இந்த நிறுவனத்தின் உரிமையினை ரூ.9 லட்சத்துக்கு தீபக் கொச்சாரின் அறக்கட்டளை ஒன்றுக்கு வேணுகோபால் தூத் கொடுத்துள்ளார். ICICI-யிடம் கடன் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பது தகவல்கள் வெளியே வந்தது.

பின்னர் இதுக்குறித்து விசாரிக்க ஐசிஐசிஐ வங்கி சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. விசாரணைக் குழு பின்னர் கடந்த அண்டு சந்தா கோச்சார் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.

இதனையடுத்து இந்த விவகாரத்தில் விடியோகான் முறைகேட்டு வழக்கில் ICICI  தமைமைச் செயல் அதிகாரி சந்தா கொச்சார், அவரது கணவர் தீபக் கொச்சார் மற்றும் வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோருக்கு எதிராக CBI தரப்பில் கடந்த ஆண்டு லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டது.

இந்தநிலையில், இன்று வீடியோகான் குழுமத்துக்கு ரூ.3,250 கோடி கடன் கொடுத்த விவகாரத்தில் ICICI வங்கியின் தமைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான சந்தா கொச்சாரின் கணவர் தீபக் கொச்சார் மற்றும் வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது CBI முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.

Trending News