ரஷியாவிடம் சுகோய் Su-30 MKI & MiG-29 போர் விமானங்களை வாங்கும் IAF!!

ரஷ்யாவிடமிருந்து கூடுதல் சுகோய் Su-30 MKI மற்றும் MiG-29 போர் விமானங்களை வாங்கிறது IAF!!

Last Updated : Jul 10, 2019, 08:46 AM IST
ரஷியாவிடம் சுகோய் Su-30 MKI & MiG-29 போர் விமானங்களை வாங்கும் IAF!! title=

ரஷ்யாவிடமிருந்து கூடுதல் சுகோய் Su-30 MKI மற்றும் MiG-29 போர் விமானங்களை வாங்கிறது IAF!!

இந்திய விமானப்படை (IAF) மேலும் 18 சுகோய் சு -30 எம்.கே.ஐ மல்டிரோல் போர்விமானம் மற்றும் 21 மிக்கோயன் மிக் -29 விமான மேன்மையுடனான ஜெட் விமானங்களை ரஷ்யாவிலிருந்து தனது ஆயுதக் களஞ்சியத்தில் கூடுதல் பலத்தை சேர்ப்பதற்கும், பாகிஸ்தான் மற்றும் சீனாவின் இரட்டை அச்சுறுத்தல்களைச் சமாளிப்பதற்கும் கவனம் செலுத்துகிறது. IAF ஏற்கனவே 272 Su-30 MKI களின் அனுமதிக்கப்பட்ட வலிமையைக் கொண்டுள்ளது, மேலும் 69 மிக் -29 UPG களையும் இயக்குகிறது.

இந்திய விமானப்படை தனது பயன்பாட்டுக்காக ரஷியாவிடம் இருந்து 18 புதிய ‘சுகோய் Su-30 MKI’ ரக போர் விமானங்களை வாங்குகிறது. இத்தகவலை ரஷிய ராணுவம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான துணை இயக்குனர் விளாடிமிர் ட்ரோச்சோவ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்; சுகோய் போர் விமானங்களை தயாரித்து அளிப்பதில் நாங்கள் அனைத்து உறுதிமொழிகளையும் நிறைவேற்றி வருகிறோம். அதனால், இந்திய விமானப்படையிடம் இருந்து 18 புதிய சுகோய் விமானங்களுக்கான ஒப்பந்தம் கிடைத்துள்ளது.

ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஒப்பந்தம் போடலாம் என்று நாங்கள் யோசனை தெரிவித்தோம். ஆனால், இந்தியா அனைத்தையும் ஒரே ஒப்பந்தமாக இணைத்து செயல்படுத்த விரும்புகிறது. அதை நாங்களும் ஏற்றுக்கொண்டோம். எனவே, இது விரிவான ஒப்பந்தமாக இருக்கும்.

மேலும், இந்தியாவுக்கு பல்வேறு ராணுவ தளவாடங்கள் அளிப்பதற்கான 6 ஒப்பந்தங்கள் எங்களுக்கு வந்துள்ளன. அவற்றில், 20 அதிநவீன ‘MiG-29’ ரக போர் விமானங்கள் வினியோகம், 450 டி90 ரக டாங்கிகளை நவீனப்படுத்துதல், இந்தியாவில் ராணுவ உதிரிபாகங்கள் உற்பத்தி செய்தல், விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கவச வாகனங்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள், கடற்படை சாதனங்கள், விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பல் ஆகியவற்றை தயாரித்தல் ஆகியவை தொடர்பாக 6 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளன.

இதற்கான வரைவு ஒப்பந்தம் மீது பரிசீலனை நடந்து வருகிறது. உற்பத்தியை விரைவுபடுத்த முதலாவது ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

 

Trending News