ஹைதராபாத்தில் ஏடிஎம்-ல் தங்கம் - ஜூவல்லரி கடைகளுக்கு ஆப்பு

இப்போது ஏடிஎம்கள் மூலம் தங்கம் வாங்கவும், விற்கவும் முடியும். இந்தியாவின் முதல் தங்க ஏடிஎம் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 22, 2022, 08:09 PM IST
  • இந்தியாவில் முதல் தங்க ஏடிஎம்
  • ஹைதராபாத்தில் திறப்பு
  • கோட்சிகா நிறுவனத்தின் முதல் முயற்சி
ஹைதராபாத்தில் ஏடிஎம்-ல் தங்கம் - ஜூவல்லரி கடைகளுக்கு ஆப்பு title=

ஏடிஎம் மூலம் பணம் எடுப்பது போல் தங்கம் வாங்குவதும் விற்பதும் செய்ய முடியாதா என்ன? டிஜிட்டல் யுகத்தில் எல்லாமே சாத்தியம் என நிரூபித்துள்ளது ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம். கோல்ட்சிகா லிமிடெட் நிறுவனம் இந்தியாவில் முதல் தங்க ஏடிஎம்-ஐ நிறுவியுள்ளது.

தங்கம் வாங்குவது மட்டுமின்றி விற்பனையும் செய்யக்கூடிய இந்தியாவின் முதல் தங்க ஏடிஎம் இதுவாகும். இந்த ஏடிஎம்கள் மூலம் தங்கம் வாங்க அனைத்து கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளையும் பயன்படுத்தலாம். மற்ற ஏடிஎம்களில் பணம் எடுப்பது போல் தங்க ஏடிஎம்கள் மூலம் தங்கத்தை எளிதாக எடுக்க வாடிக்கையாளர்களுக்கு ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ஸ்மார்ட் கார்டுகளையும் நிறுவனம் வழங்குகிறது.

மேலும் படிக்க | 31 மார்ச் 2022-க்குள் இந்த பணிகளை செய்து முடிக்கவும்: இல்லையென்றால் பெரும் பிரச்சனை

மூவாயிரம் தங்க ஏடிஎம்கள்

ஒரு வருடத்திற்குள் இந்தியா முழுவதும் 3,000 தங்க ஏடிஎம்களை அமைக்க நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. இந்தியாவின் முதல் தங்க ஏடிஎம் செயல்பாடுகளை தொடங்குவதற்கு சென்னையை சேர்ந்த டிரங்க்ஸ் டேட்டாவேர் எல்எல்பி நிறுவனத்துடன் இணைந்து இதனை கோல்ட்சிகா நிறுவனம் சாத்தியப்படுத்தியுள்ளது. நிதித் துறையில் பல்வேறு தேவைகள் மற்றும் வங்கிச் சேவைகளுக்கான மென்பொருள் தீர்வுகளை டிரங்க்ஸ் டேட்டாவேர் எல்எல்பி  நிறுவனம் வழங்குகிறது. உலகளவில் பல வங்கிகளுக்கு பாதுகாப்பான சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று.

ஒவ்வொரு ஏடிஎம்மிலும் ஐந்து கிலோ தங்கம்

ஒவ்வொரு ஏடிஎம் இயந்திரத்திலும் ஐந்து கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்படுகிறது. அவை உயர்தர, BIS ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கம். இந்த இயந்திரம் 0.5 கிராம் முதல் 100 கிராம் வரை தங்கத்தை வழங்க முடியும். தங்கம் ஒவ்வொரு நாளும் சந்தை விலையில் கிடைக்கிறது. மற்ற பொருட்களைப் போலவே அனைவரும் தங்கத்தை வாங்கலாம். ஒவ்வொரு கிராம் தங்கமும் இயந்திரத்தில் காட்டப்படும். தரம், எடை மற்றும் பாதுகாப்பு பற்றிய கவலைகளைத் தவிர்ப்பதற்காக உயர்தர இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

மேலும் படிக்க | மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு - உங்கள் ஏரியாவில் விலை என்ன?

உலகில் தங்கத்தின் இரண்டாவது பெரிய நுகர்வோர் இந்தியா. தங்கத்தின் தேவையை பொறுத்த வரை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் பெரும்பாலான இறக்குமதிகள் நகைத் தொழிலுக்குத்தான் நடைபெறுகிறது. இந்நிலையில், அனைத்து தரப்பு மக்களும் தங்கத்தை சிறிய அளவில் கூட வாங்குவதை எளிதாக்கும் வகையில், கோல்டு ஏடிஎம்களை நிறுவனம் கொண்டு வந்துள்ளது. விரைவில் ஏகபோக வரவேற்பு கிடைக்கும் என்றும் கோல்ட்சிகா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News