Maharastra Political Crisis: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார், 9 கட்சி தலைவர்களுடன் இன்று பாஜக - சிவசேனா (ஷிண்டே) கூட்டணியில் இணைந்தார். அதுமட்டுமின்றி, அஜித் பவார் துணை முதல்வர் பதவியை பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸுடன் பகிர்ந்து கொள்கிறார். மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 8 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.
43 எம்எல்ஏக்கள் ஆதரவு
மொத்தம், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 53 எம்எல்ஏக்களில் 43 பேரின் ஆதரவு அஜித் பவாருக்கு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு அஜித் பவார் விருப்பம் தெரிவித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு இன்று அஜித் பவாரின் மும்பை இல்லத்தில் கூடியது. அங்கு கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே மற்றும் மூத்த தலைவர் சாகன் புஜ்பால் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் கலந்து கொள்ளவில்லை.
மேலும் படிக்க | டீஸ்டா செடல்வாட்டுக்கு 7 நாட்கள் கால அவகாசம் வழங்கியது SC: பின்னணி என்ன?
இதனிடையே, மும்பையில் நடந்த சந்திப்பு குறித்து தனக்குத் தெரியாது என சரத் பவார் புனேயில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். "இந்தக் கூட்டத்திற்கு ஏன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை, ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவருக்கு (அஜித் பவாருக்கு) எம்எல்ஏக்கள் கூட்டத்தை அழைக்க உரிமை உள்ளது. அவர் அதை வழக்கமாக செய்கிறார். இந்த சந்திப்பு பற்றி என்னிடம் அதிக விவரங்கள் இல்லை" என்று சரத் பவார் கூறினார்.
இதேபோல் 2019ஆம் ஆண்டிலும்...
சரத் பவார் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஒரு மாதத்திற்குப் பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது, பின்னர் அவர் "மக்களின் உணர்வுகளை அவமதிக்க முடியாது" என மூன்று நாட்களுக்குப் பிறகு அதை திரும்பப் பெற முடிவு செய்தார். 2019இல் பாஜகவுடன் இணையும் முயற்சியில் தோல்வியடைந்து, அதிகாலையில் துணை முதலமைச்சராக பதவியேற்ற அஜித் பவார், கட்சியில் குறைந்து வரும் தனது நிலையை மீண்டும் எழுப்ப மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.
அவருக்கு கட்சிப் பதவி அளிக்கப்படவில்லை என்றாலும், சுப்ரியா சுலே மற்றும் கட்சித் தலைவர் பிரஃபுல் படேல் ஆகியோர் ஜூன் 10ஆம் தேதி அன்று செயல் தலைவர்களாக உயர்த்தப்பட்டனர். அக்கட்சியின் தலைவர் சரத்பவாரின் தம்பி மகனான அஜித் பவார் தற்போது கட்சியை இரண்டாக பிரித்துள்ளார். மேலும், மகாராஷ்டிரா அரசியல் சூழல் பரபரப்பாகியுள்ளது.
மேலும் படிக்க | பாம் வைக்க ரோபோடிக்ஸ் படிப்பு... ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கர்நாடகாவில் சதித்திட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ