மாநிலங்களவை தேர்தல்: வாக்குப்பதிவில் ட்விஸ்ட் இருக்குமா? பாஜக வலையில் சமாஜ்வாதி எம்எல்ஏக்கள்?!

Rajya Sabha Election 2024: உத்தர பிரதேசத்தில் பிப். 27ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குப்பதிவில், ஒரு கட்சி உறுப்பினர்கள் வேறு கட்சிக்கும் வாக்களிக்கும் சூழல் உருவாகி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Feb 26, 2024, 11:45 PM IST
  • குறிப்பாக, பாஜக இந்த சூழலை தனக்கு சாதமாக்கிக் கொள்ளும் என கூறப்படுகிறது.
  • மொத்தம் 10 மாநிலங்களவை தொகுதிகள் காலியாக உள்ளன.
  • இதில் பாஜக - சமாஜ்வாதி கட்சியுடன் கடுமையான போட்டி நிலவுகிறது
மாநிலங்களவை தேர்தல்: வாக்குப்பதிவில் ட்விஸ்ட் இருக்குமா? பாஜக வலையில் சமாஜ்வாதி எம்எல்ஏக்கள்?! title=

Uttar Pradesh, Rajya Sabha Election 2024: நாடு முழுவதும் 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைய இருக்கிறது. எனவே, இந்த 56 இடங்களுக்கும் புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய பிப். 27ஆம் தேதி (அதாவது நாளை) தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. 

அந்த வகையில், மாநிலங்களவையில் போட்டியிட விருப்பம் தெரிவப்பவர்களுக்கான விண்ணப்ப படிவம் தாக்கல் பிப். 8 ஆம் தேதி தொடங்கி, கடந்த பிப். 15ஆம் தேதி வரை நடைபெற்றது. மக்களவை தேர்தல் இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவும் நடைபெற உள்ள நிலையில், இந்த மாநிலங்களவை தேர்தலும் முக்கியத்துவம் பெறுகிறது. 

நாளை வாக்குப்பதிவு

இதில், எந்தெந்த கட்சியினர் யார் யாருக்கு வாக்களிப்பார்கள், அதாவது ஒரு மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களே மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள். எனவே, அந்தெந்த கட்சியினர் தங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கிறார்களா இல்லையா என்பதை உற்றுநோக்கி ஆக வேண்டும், ஒருவேளை அதிருப்தி எம்எல்ஏக்கள் இருந்தால் அது அக்கட்சிக்கு பெரும் சிக்கலை உண்டாக்கும். 

மேலும் படிக்க | துவாரகா... கடலுக்கடியில் பிரதமர் மோடி செய்த பூஜை... உங்களுக்கும் செல்ல ஆசையா..!

அந்த வகையில், உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில், சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏக்கள் பாஜகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும், நாளைய மாநிலங்களவை தேர்தல் வாக்குப்பதிவில் பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

10 இடங்கள், 11 வேட்பாளர்கள்...

மாநிலங்களவை தேர்தலில் வாக்களிப்பு தொடர்பாக சமாஜ்வாடி கட்சி சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் ஒரு சிலர் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகவே இந்த தகவல் வெளியாகி உள்ளது. அமேதியின் மகாராஜி தேவி, பல்லவி படேல், கல்பியில் இருந்து வினோத் சதுர்வேதி, கௌசாம்பியைச் சேர்ந்த பூஜா பால் உள்ளிட்ட ஆறு சமாஜ்வாதி கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. 

உத்தர பிரதேசத்தில் மொத்தம் 10 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இங்கு பாஜகவுக்கும், INDIA கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும்தான் கடும் போட்டியே. இதில் பாஜக எட்டு வேட்பாளர்களையும், சமாஜ்வாதி 3 வேட்பாளர்களையும் நிறுத்தி உள்ளது. குறிப்பாக, இதில் 7 பாஜக வேட்பாளர்கள் மற்றும் 2 சமாஜ்வாதி வேட்பாளர்களின் வெற்றி உறுதியாகும். ஆனால், இரு கட்சிகளிலும் மீதம் இருக்கும் தலா ஒருவருக்கு இடையேதான் கடும் போட்டி நிலவும். இங்குதான் பாஜகவுக்கு சாதகமாக சமாஜ்வாதி சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வாய்ப்புகள் உள்ளன. 

யார் யாரிடம் எத்தனை தொகுதிகள்?

உத்தர பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இருப்பினும் அதில் நான்கு தொகுதிகள் காலியாக இருப்பதால் 399 தொகுதிகளே கணக்கில் உள்ளது. இதில் பாஜக தனது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தொகுதிகளை சேர்த்து 288 உறுப்பினர்களை பெற்றுள்ளது. மேலும் கூட்டணி கட்சியை சேர்ந்த ஒருவர் சிறையில் இருக்கிறார், எனவே எண்ணிக்கை 287 ஆக குறையும். 

அதே நேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி.யான ரித்தேஷ் பாண்டே சமீபத்தில் பாஜகவில் இணைந்தார், இவரது தந்தை ராகேஷ் பாண்டே சமாஜ்வாதி கட்சியின் எம்எல்ஏ ஆவார். இருப்பினும், ராகேஷ் பாண்டேவின் வாக்கு பாஜகவுக்குதான் என கூறப்படுகிறது. அந்த வகையில் பாஜகவின் 8ஆவது வேட்பாளர் வெற்றிபெற இன்னும் 8 வாக்குகள் தேவை என கூறப்படுகிறது. ஆனால் அதே வேளையில், சமாஜ்வாதியின் 3ஆவது வேட்பாளர் வெற்றி பெற்ற 3 அல்லது 4 வாக்குகள் போதுமானது என்றும் கூறப்படுகிறது.  

சமாஜ்வாதி கட்சிக்கு அதன் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து 110 உறுப்பினர்கள் கைவசம் உள்ளனர். மேலும், இதில் 2 பேர் சிறையில் இருப்பதாலும், ராகேஷ் பாண்டேவின் வாக்கு உறுதியாகாததாலும் அவற்றை தவிர்த்து இன்னும் 4 வாக்குகள் தேவைப்படும் எனவே, இந்த 10ஆவது வேட்பாளரை தேர்வு செய்யும் பொருட்டு நிச்சயம் வாக்குகள் மாறி மாறி செலுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன. 

மேலும் படிக்க | காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி உறுதி! டெல்லியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News