4 நாட்கள் வெப்பம் கொளுத்தும்: வானிலை மையம்

Last Updated : Jul 25, 2017, 09:49 AM IST
4 நாட்கள் வெப்பம் கொளுத்தும்: வானிலை மையம் title=

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை அதிகாரிகள் தெரிவித்தது: 

தமிழகம் மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலு குறைந்து காணப்பட்டதால் இன்று முதல் 4 நாட்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். ஜூலை 24ம் தேதி வரை 100 மி.மீ., மழை பெய்திருக்க வேண்டிய நிலையில், 70 மி.மி., மழையே பெய்துள்ளது. இந்த ஆண்டு 28% குறைந்து பெய்துள்ள மழை, 2016-ம் ஆண்டு 3%, 2015-ம் ஆண்டு 7%, 2014-ம் ஆண்டு 11% குறைவாக பெய்துள்ளது.

மேலும் ஜூலை 29 முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. 

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Trending News