சிங்கு எல்லையில் பயங்கரம்: விவசாயிகள் போராட்ட இடத்திற்கு அருகே வாலிபர் உடல்

வீடியோவில் காணப்படும் நபர்கள் யாரும் காயப்பட்ட மனிதனுக்கு உதவவோ அல்லது காயத்துக்கு சிகிச்சை அளிக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 15, 2021, 12:01 PM IST
சிங்கு எல்லையில் பயங்கரம்: விவசாயிகள் போராட்ட இடத்திற்கு அருகே வாலிபர் உடல் title=

புதுடெல்லி: சிங்கு எல்லையில் உள்ள விவசாயிகள் போராட்ட இடத்தில் இன்று காலை ஒரு இளைஞனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த இளைஞனின் மணிக்கட்டு துண்டிக்கப்பட்டு இருந்ததாகவும், தரையில் இரத்த வெள்ளத்தில், கீழே விழுந்துகிடந்த போலீஸ் தடுப்பில் அவர் உடல் கட்டப்பட்டிருந்ததாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"இன்று அதிகாலை 5 மணியளவில், விவசாயிகளின் போராட்டம் (Farmers Protest) (குண்டிலி, சோனிபத்தில்) நடைபெற்ற இடத்தில் கைகள், கால்கள் வெட்டப்பட்ட நிலையில் ஒரு உடல் கிடந்தது. இதை செய்தது யார் என்பது தெரியவில்லை. அடையாளம் தெரியாத நபர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இது குறித்த பல வதந்திகள் இருக்கின்றன" என்று போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஹன்ஸ்ராஜ் குறியதாக செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ கூறியது.

அரியானாவின் (Haryana) சோனிபத் மாவட்டத்தில் உள்ள குண்டிலியில் நடந்த இந்த கொடூரமான கொலைக்கு நிஹாங்ஸ் என்ற ஒரு போர்வீரர்களின் சீக்கிய குழு குற்றம் சாட்டப்படுவதாக ஆரம்ப அறிக்கைகள் கூறுகின்றன.

நிஹாங்ஸ் குழுவை சேர்ந்த சிலர், கொல்லப்பட்ட நபரை சுற்றி நின்றுகொண்டிருப்பதைக் காட்டும் ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. அவரது கை வெட்டபட்டிருப்பதையும், அவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும் இதில் காண முடிகிறது. அந்த நபரின் கண்களில் அதிர்ச்சியும் வலியும் தெரிகிறது.

ALSO READ: Farmers Protest: ராகுல் காந்தி ட்வீட் செய்த கவிதை

நிஹாங்ஸ் குழுவைச் சேர்ந்த சிலர், ஈட்டிகளை ஏந்தி, அந்த நபரைச் சுற்றி நிற்கிறார்கள். அந்த நபர் தனது பெயர் மற்றும் சொந்த கிராமத்தின் பெயரை சொல்ல வேண்டும் என கூறுகிறார்கள். வீடியோவில் காணப்படும் நபர்கள் யாரும் அந்த மனிதனுக்கு உதவவோ அல்லது காயத்துக்கு சிகிச்சை அளிக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மற்றொரு வீடியோவில் அந்த மனிதனின் உடல் தலைகீழாக ஒரு கயிற்றால் கட்டப்பட்டிருப்பதை காண முடிகிறது. அவரது இடது கை முழுவதும் இரத்தம் உள்ளது.

சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பை அவமதித்ததாக கூறி, அந்த இளைஞனை நிஹாங்ஸ் அடித்து கொன்றதாக தகவல்கள் கூறுகின்றன.

அவர்கள் அந்த நபரை அடித்து கொன்றதாகவும், உடலை போலீஸ் தடுப்பில் தொங்கவிட்டதாகவும் பின்னர் மணிக்கட்டை வெட்டியதாகவும் கூறப்படுகிறது.

சோனிபத் போலீசார் உடலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

மத்திய அரசின் (Central Government) புதிய வேளான் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு வருடத்திற்கும் மேலாக சிங்கு எல்லையில் (டெல்லியின் எல்லையில்) விவசாயிகள் திரண்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக எல்லையில் பல உழவர் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஹரியானா முதல்வர் எம்எல் கட்டர் இந்த வாரம் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சோனிபத் செல்ல இருந்தார்.

இருப்பினும், விவசாயிகளின் தொடர்ச்சியான எதிர்ப்புகளுக்குப் பிறகு, திரு கட்டார் பின்வாங்கி நிகழ்வில் கலந்துகொள்ள வேறு ஒருவரை அனுப்பினார்.

போராட்டம் தொடங்கியதில் இருந்து ஹரியானாவில் விவசாயிகள் போராட்டங்கள் பெரும் தலைப்புச் செய்தியாக இருந்துவருகிறது. போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே அடிக்கடி வன்முறை மோதல்கள் நடக்கின்றன.

ALSO READ: நவராத்திரி விழாவில் விவசாயிகள் போராட்டத்தின் காட்சிகள்: வைரலாகும் விழா வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News