Manslaughter: மகளை முதலைக்கு உணவாக்கிய அப்பா! ஜாதிவெறியில் ஆணவக்கொலை செய்த தந்தை

Honor Killing Crime: கேட்போரை நடுங்க வைத்த ஆணவக் கொலை! மகளையும், அவர் காதலித்த இளைஞரையும் கொலை செய்து முதலைகளுக்கு உணவு கொடுத்த தந்தையின் ஜாதி வெறி

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 20, 2023, 03:36 PM IST
  • கேட்போரை நடுங்க வைத்த ஆணவக் கொலை
  • மகளையும் காதலனையும் முதலைகளுக்கு விருந்தாக்கிய அப்பா
  • மத்தியப்பிரதேச மாநில அடக்குமுறை
Manslaughter: மகளை முதலைக்கு உணவாக்கிய அப்பா! ஜாதிவெறியில் ஆணவக்கொலை செய்த தந்தை title=

போபால்: மத்திய பிரதேசத்தில் கேட்போரை நடுங்க வைக்கும் கொடூர கொலை நடந்துள்ளது. மொரேனா மாவட்டத்தில் உள்ள ரத்னபாஷி கிராமத்தில், காதலித்த பெண்ணை, அவரது குடும்பத்தினர் சுட்டுக் கொன்று, முதலைகள் நிறைந்த ஆற்றில் வீசியுள்ள கொடூர சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி சாதியை மீறி திருமணம் செய்பவர்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் அடக்குமுறைகள் தொடர்கிறது என்பதும், ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் சாதியை மீறி அல்லது தங்கள் குடும்பங்களின் விருப்பத்திற்கு மாறாக காதலிப்பதற்காகவோ அல்லது திருமணம் செய்ததற்காகவோ 'ஆணவக்கொலை’ செய்யப்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மத்தியப் பிரதேசத்தில் 'கௌரவக் கொலை'

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள் உயர் சாதி ஆண்களை திருமணம் செய்யும் போது மட்டுமல்ல, பிந்தங்கிய சமூகத்தின் ஆண்கள் உயர் சாதி பெண்களை திருமணம் செய்யும் போதும் செய்யப்படும் சாதிய ஒடுக்குமுறை குறிப்பாக கடுமையாக உள்ளது. தங்கள் மகன் அல்லது மகளின் செயலால் கெளரவம் பறிபோவதாக நினைக்கும் சாதிவெறி கொண்ட பெற்றோர்கள், நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு வன்மத்தை வெளிப்படுத்துகின்றனர்.  

மேலும் படிக்க | போதையில் புத்திமாறுமா... 30 ஆண்டுக்கு முன் கொலை - இப்போது சிக்கிய கொலையாளி - உண்மை கசிந்தது எப்படி?

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டம் ரத்னாபாஷி பகுதியைச் சேர்ந்த ஷிவானி தோமர் (வயது 18) என்ற பெண்ணும், பக்கத்து கிராமமான பாலாபுவைச் சேர்ந்த ரதிஷ்யா தோமர் (வயது 21) என்ற இளைஞனும் காதலித்து வந்துள்ளனர்.  

ஷிவானி தோமர் காதலிப்பது தெரிந்ததும், அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஷிவானி தோமம் தனது காதலனை விட்டு விலகத் தயாராக இல்லை. இதனால் குடும்பத்தில் பிரச்சனை கனன்றுக் கொண்டே இருந்தது.

குடும்பத்தின் எதிர்ப்பை மீறி காதலித்த பெண் மற்றும் அவரது காதலனை பெண்ணின் குடும்பத்தினர் சுட்டுக் கொலை செய்து, அவர்களின் சடலங்களை முதலைகள் அதிகம் இருக்கும் ஆற்றில் வீசி இருக்கிறார்கள்.

மேலும் படிக்க | 15 வயது மாணவனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை - மரண வாக்குமூலத்தில் பகீர்

ஆனால், தங்கள் மகளைக் காணவில்லை என்று ஷிவானியின் தந்தை ராஜ்பால் சிங் தோமர் ஜூன் 3 ஆம் தேதி அம்பாஹ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல, தங்கள் மகன் ரதிஷ்யா தோமர் காணவில்லை என ஷிவானியின் காதலனின் குடும்பத்தினர் அதே காவல் நிலையத்தில் புகாரை அளித்தார்கள்.

ஒரே காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட இருவேறு புகார்களின் அடிப்படையில், அம்பாஹ் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது இருகுடும்பத்திடமும் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் காதலித்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியபோது, ஷிவானியின் தந்தை ராஜ்பால் சிங், ஷிவானியையும், ராதிஷ்யாவையும் சுட்டுக் கொன்றதை ஒப்புக்கொண்டார். சடலங்கள் எங்கே என்று கேட்டதற்கு, சடலங்களை மூட்டையில் கட்டி முதலைகள் நிறைந்த ஆற்றில், அவற்றுக்கு உணவாக போட்டுவிட்டதாக சொன்னதைக் கேட்டதும், போலீசார் அதிர்ந்து போனார்கள். 

இந்த ஆணவப் படுகொலை விவகாரம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க | போதையில் பரதநாட்டியம் போட்ட குடிமகன் - குமாரபாளையத்தில் அட்டகாசம்: வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News