கர்ப்பிணிக்கு HIV ரத்தம்: தாமாக முன்வந்து விசாரிக்கிறது HC...

கர்ப்பிணிக்கு HIV ரத்தம் செலுத்தப்பட்டது குறித்து தாமாக முன்வந்து விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்...

Last Updated : Dec 27, 2018, 11:28 AM IST
கர்ப்பிணிக்கு HIV ரத்தம்: தாமாக முன்வந்து விசாரிக்கிறது HC... title=

கர்ப்பிணிக்கு HIV ரத்தம் செலுத்தப்பட்டது குறித்து தாமாக முன்வந்து விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்...

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு இரத்தச் சிவப்பணு குறைபாடு காரணமாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு சாத்தூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டது. இந்த ரத்தத்தில், எச்ஐவி இருந்துள்ளது பின்னர் தான் தெரிய வந்தது. 
 
இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. முறையாக பரிசோதிக்காமல் ரத்தத்தை ஏற்றிய அரசு மருத்துவமனை மீது மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, சாத்தூர் காவல்நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இந்நிலையில் இன்று இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. கர்ப்பிணி பெண்ணிற்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் ஜனவரி 3 ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Trending News