கார் ஷோரூமில் பெண் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதால் பரபரப்பு!

கார் விற்பனையகத்தில் பெண் எதிர்பாராத விதமாக கார் விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!

Last Updated : Feb 21, 2019, 12:24 PM IST
கார் ஷோரூமில் பெண் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதால் பரபரப்பு!  title=

கார் விற்பனையகத்தில் பெண் எதிர்பாராத விதமாக கார் விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் காரை விற்பனையகத்தில் இருந்து ஓட்டிப் பார்க்க முயன்ற பெண் விபத்து ஏற்படுத்திய காட்சிகள் வெளியாகி உள்ளன.

மண்டியில் உள்ள ஹூண்டாய் விற்பனையகத்திற்கு வந்த பெண் ஒருவர், கார் வாங்குவது குறித்த தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் விருப்பப்பட்ட காரை தான் ஓட்டி பார்க்க அனுமதி வழங்கியுள்ளார். பின்னர் ஒரு காரில் ஏறி அவர் இயக்கியபோது, விற்பனையகத்தின் கண்ணாடியை உடைத்து வெளியேறிய கார், முதல் தளத்தில் இருந்து கீழ் தளத்தில் விழுந்து சாலையில் நிறுத்தப்பட்ட மற்ற கார்கள் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விற்பனையகத்திற்கு 4 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவர் சோதனை செய்த காரன் மாடல் Elite i20 ஆகும். இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டுள்ள CCTV கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

Trending News