Dress Code: கர்நாடாகவைப் போலவே கேரளாவில் கல்வியில் புகும் ஹிஜாப் பிரச்சனை

Kerala HIjab Row: ஹிஜாப் சர்ச்சை கேரளாவின் மருத்துவக் கல்லூரிகளில் தொடங்க வாய்ப்புகள் பிரகாசமாக தெரிகிறது. திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் தற்போதுள்ள ஆபரேஷன் தியேட்டர் உடையை மாற்ற வேண்டும் என 7 மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 28, 2023, 04:19 PM IST
  • மருத்துவக் கல்லூரிகளில் தொடங்குகிறதா ஹிஜாப் பிரச்சனை?
  • கேரள மாநிலத்தில் ஹிஜாப் சர்ச்சை
  • ஆபரேஷன் தியேட்டரில் ஹிஜாப் போன்ற ஆடை வேண்டும்: மாணவிகள் கோரிக்கை
Dress Code: கர்நாடாகவைப் போலவே கேரளாவில் கல்வியில் புகும் ஹிஜாப் பிரச்சனை title=

ஹிஜாப் சர்ச்சை கல்லூரிகளின் ஆபரேஷன் தியேட்டர் வரை சென்றுவிட்டது, கேரளாவின் மருத்துவக் கல்லூரிகளில் எழுந்துள்ள கோரிக்கை ஆச்சரியம் மட்டுமல்ல, பரவலான சந்தேகங்களையும் எழுப்புகிறது.  கேரளாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி முஸ்லிம் மாணவிகள் தற்போதுள்ள ஆபரேஷன் தியேட்டர் உடைக்கு பதிலாக ஹிஜாப் அணிய அனுமதி கோரியுள்ளனர்.

ஹிஜாப் சர்ச்சை கேரளாவின் மருத்துவக் கல்லூரிகளில் தொடங்க வாய்ப்புகள் பிரகாசமாக தெரிகிறது. திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் தற்போதுள்ள ஆபரேஷன் தியேட்டர் உடையை மாற்ற வேண்டும் என 7 மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆபரேஷன் தியேட்டருக்குள் அணிவதற்கு ஹிஜாபுக்கு மாற்றாக, அதேபோல இருக்கும் ஆடையை வழங்குமாறு கலுலூரி முதல்வரிடம் மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளார். நீண்ட கை கொண்ட ஸ்க்ரப் ஜாக்கெட்டுகள் மற்றும் ஹிஜாப் போன்று தலையை மறைக்கும் அறுவை சிகிச்சை உடைகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் லினெட் ஜே. மாரிஸ் மாணவிகளின் கோரிக்கையை ஏற்கவில்லை. ஆபரேஷன் தியேட்டருக்குள் அணியும் உடையை மாற்றுவதில் பல தொழில்நுட்ப பிரச்சனைகள் வரலாம் என்று கல்லூரி முதல்வர் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் படிக்க | குழந்தைகளின் உயரம் அதிகரிக்க... ‘இந்த’ சூப்பர் உணவுகள் கை கொடுக்கும்!

இந்த பிரச்சினை தொடர்பாக, கலந்தாலோசனைக் கூட்டத்தை கூட்டுவதாக அவர் உறுதியளித்திருந்தாலும், அதில் பல அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் தொற்று கட்டுப்பாட்டு குழு உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள். மாணவிகளின் கோரிக்கைகள் குறித்தும், ஆபரேஷன் தியேட்டரில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும். அதன் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்.

மதப் பிரச்சினையை எழுப்பும் மாணவிகள் 

திங்கட்கிழமையன்று, கல்லூரி முதல்வரிடம், அறுவை சிகிச்சை அணியும்போது அணியும் ஆடையை மாற்றக் கோரிய மாணவிகள், மதப் பிரச்சினையை எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்பொழுதும் தலையை மூடுவது நமது மத மரபுகளில் ஒரு அங்கம் என்று மாணவிகள் தெரிவித்தனர்.

தற்போதுள்ள உடை காரணமாக ஆபரேஷன் தியேட்டருக்குள் ஹிஜாப் அணிய முடியாது. நீண்ட கை ஸ்க்ரப் ஜாக்கெட்டுகள் மற்றும் தலையை மறைக்கும் அறுவை சிகிச்சை ஹூட்கள் தங்கள் மத நம்பிக்கைகளைப் பேணுவதோடு, அறுவை சிகிச்சை அரங்குகளுக்குள் தொற்றுநோயைத் தடுக்கத் தேவையான தரத்தைப் பூர்த்தி செய்ய உதவும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | பக்ரீத் பண்டிகை விற்பனை! ஆட்டின் விலை ரூ 8 லட்சம்! 200 கிலோ எடை கொண்ட ஸ்பெஷல் ஆடு

சர்வதேச தரத்தில் ஆபரேஷன் தியேட்டர் ஆடை 

 ஆபரேஷன் தியேட்டருக்குள் இருக்கும் ஆடை சர்வதேச தரத்தில் உருவாக்கப்பபட்டுள்ளது. இதில் எந்த விதமான மாற்றமும் விரிவான விவாதம் மற்றும் ஆலோசனையின் பின்னரே செய்ய முடியும் என்று திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் லினெட் ஜே. மாரிஸ் தெரிவித்தார்.

பள்ளியிலும் ஹிஜாப் பிரச்சனை

டைம்ஸ் நவ் அறிக்கையின்படி, முன்பு இதேபோன்ற ஹிஜாப் தொடர்பான சர்ச்சை ஒரு பள்ளியில் எழுப்பப்பட்டதது. அங்கு, ஸ்டூடண்ட் போலீஸ் கேடட் திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு முஸ்லிம் மாணவி, ஹிஜாப் மற்றும் நீண்ட கை ஆடை அணிவதில் இருந்து விலக்கு கோரியிருந்தார். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மாணவி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

மேலும் படிக்க | போரால் தொடரும் உயிரிழப்புகள்! ரஷ்யாவின் அண்மை தாக்குதலில் நால்வர் பலி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News